நடிகர் யோகிபாபுவை பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜன் சந்தித்து நட்பு பாராட்டிய புகைப்படங்கள் வெளியாகியுள்ளது.
காமெடி நடிகர் யோகிபாபுவும், கிரிக்கெட் வீரர் நடராஜனும் நல்ல நண்பர்கள் என்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம். அண்மையில் கூட யோகிபாபு நடித்த மண்டேலா படத்தை பார்த்து வியந்த கிரிக்கெட் வீரர் ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமி, அதை நடராஜனிடம் கூறியுள்ளார். அப்போது யோகிபாபு எனது நண்பர்தான் என கூறி ஸ்ரீவத்ஸ் கோஸ்வாமியை யோகிபாபுவுடன் வீடியோ காலில் பேச வைத்துள்ளார் நடராஜன். இந்த செய்தி ஏற்கனவே வெளியானது.
இந்த நிலையில் நடிகர் யோகிபாபுவை பிரபல கிரிக்கெட் வீரர் நடராஜனை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பில் கிரிக்கெட் வீரர் நடராஜனுக்கு யோகி பாபு முருகர் சிலையை பரிசளித்துள்ளார். இருவரும் ரிலாக்ஸாக பேசிக்கொண்டே உணவு உட்கொண்டுள்ள புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் யோகிபாபுவை சந்தித்த புகைப்படத்தை நடராஜன் வெளியிட்டுள்ளார். அதில் இந்த நாளை நினைவில் வைத்துக்கொள்ள வேண்டும். அன்பான மற்றும் கலகலப்பான நண்பர் நடிகர் யோகிபாபுவை சந்தித்த அழகிய தருணம் இது என குறிப்பிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தை கலக்கி வருகிறது.