யாழ்ப்பாணம் ஊர்காவற்துறை பகுதியில் அண்மையில் இடம்பெற்ற பதிவு திருமணத்தில் கலந்து கொண்ட மூதாட்டியொருவருக்கு கொரோனா தொற்று உறுதியாகியுள்ளது.
ஊர்காவற்துறை பருத்தியடைப்பு பகுதியை சேர்ந்த பெண்ணொருவருக்கு நேற்றைய தினம் திடீரென உடல்நல குறைவு ஏற்பட்டதையடுத்து ஊர்காவற்துறை வைத்தியசாலைக்கு சிகிச்சைக்காக சென்று இருந்தார்.
அங்கு அவருக்கு மேற்கொள்ளப்பட்ட அன்டிஜன் பரிசோதனையில் தொற்று உறுதியாகியுள்ளது.
அவரது வீட்டிற்கு அருகில் அண்மையில் இடம்பெற்ற பதிவு திருமண நிகழ்விலும் கலந்து கொண்டுள்ளார்.
சுகாதாரதுறையினரின் அனுமதி பெற்று, 10 மாத்திரமே அந்த திருமணத்தில் கலந்து கொண்டிருந்தனர்.
அதனை அடுத்து பதிவு திருமண நிகழ்வில் கலந்து கொண்டவர்கள் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1