நடிகர் சிவகார்த்திகேயன் மற்றும் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் சமீபத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகின்றன.
நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் ‘டாக்டர்’ படத்தில் நடித்து முடித்துள்ளார். அந்தப் படத்தில் பிரியங்கா அருள்மொகன் கதாநாயகியாக நடித்துள்ளார். அனிருத் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.
இந்தப் படத்தின் அனைத்து பணிகளும் முடிக்கப்பட்டு வெளியீட்டிற்கு தயாராக உள்ளது. டாக்டர் திரைப்படம் டிஸ்னி ஹாட்ஸ்டார் ஓடிடி தளத்தில் வெளியாக இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் சிவகார்த்திகேயன் மற்றும் நெல்சன் திலீப்குமார் மற்றும் நடிகர் ரெடின் கிங்ஸ்லீ மூவரும் சமீபத்தில் சந்தித்துக் கொண்ட புகைப்படம் இணையத்தில் வைரலாகி வருகின்றது.
சிவகார்த்திகேயன் தற்போது சிபிசக்கரவர்த்தி இயக்கத்தில் ‘டான்’ படத்தில் நடித்து வருகிறார். அந்தப் படம் கல்லூரி கதைக்களத்தை அடிப்படையாக வைத்து எடுக்கப்பட்டு வருவதால் அதற்காக சிவகார்த்திகேயன் வெகுவாக உடல் எடையைக் குறைத்துள்ளதாகத் தெரிகிறது. சமீபத்தில் வெளியான புகைப்படத்தை பார்த்து அதை தெரிந்து கொள்ளலாம். சிவகார்த்திகேயனின் மெலிந்த தோற்றம் ரசிகர்களை அதிர்ச்சியடையச் செய்துள்ளது.
இதற்கிடையில் நெல்சன் திலீப்குமார் விஜய் நடிப்பில் ‘பீஸ்ட்’ திரைப்படத்தை இயக்கி வருகிறார்.