இந்தியாவில் திரைத்துறையை நெறிப்படுத்தும் ஒளிப்பதிவு சட்டத்தில் மத்திய அரசு, நான்கு திருத்தங்களை செய்துள்ளது. இந்த திருத்தத்தால் திரைத்துறையில் படைப்புச் சுதந்திரம் பறிபோகும் என்று குற்றம் சுமத்தப்படுகிறது.
இது குறித்து மக்கள் நீதி மய்யம் கட்சித் தலைவரும், நடிகருமான கமல்ஹாசன் சில நாட்களுக்கு முன்னர் தன் எதிர்ப்பைத் தெரிவித்திருந்தார். இந்நிலையில் சூர்யாவும் எதிர்ப்பு தெரிவித்து இருக்கிறார்.
நடிகர் சூர்யா தனது சமூக வலைத்தள பக்கத்தில், ‘சட்டம் என்பது கருத்து சுதந்திரத்தைக் காப்பதற்காகத்தான். அதன் குரல்வளையை நெறிப்பதற்காக அல்ல’ என்று அழுத்தமாக பதிவிட்டுள்ளார்.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1