இந்தியாவில் அடையாளம் காணப்பட்ட- வேகமாக பரவும் பி .1.617.2 அல்லது ‘டெல்டா’ கோவிட் திரிபால் பாதிக்கப்பட்ட 14 பேர் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு, திருகோணமலை, காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலிருந்து தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கொழும்பு மாவட்டத்தின் கொழும்பு நகராட்சி மன்றப் பகுதி, கொலன்னாவா மற்றும் அங்கொட பகுதிகளில்் டெல்டா வைரஸால் பாதிக்கப்பட்டவர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
முன்னதாக, கொழும்பு தெமட்டகொட பகுதியில் டெல்டா கோவிட் திரிபால் பாதிக்கப்பட்ட ஐந்து பேர் அடையாளம் காணப்பட்டனர்.
இதேவேளை, பி .1.1.7. அல்பா திரிபு பல பகுதிகளிலும் பதிவாகி வருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1