2 டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு!

Date:

தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது..

சமீபத்தில் சண்டிகரில் உள்ள முதுநிலை மருத்துவக்கல்வி மற்றும் ஆராய்ச்சி நிறுவனம், பஞ்சாப் அரசுடன் இணைந்து நடத்திய ஆய்விலும் இது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆய்வு முடிவுகளை சுட்டிக்காட்டி, தடுப்பூசியின் 2 டோஸ்களையும் போட்டுக்கொண்டால் 98 சதவீதம் உயிருக்கு பாதுகாப்பு என்று நிதி ஆயோக் உறுப்பினர் (சுகாதாரம்) வி.கே.பால் நேற்று தெரிவித்தார்.

முன்களப் பணியாளர்களான போலீசாரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. தடுப்பூசியே செலுத்திக்கொள்ளாத 4 ஆயிரத்து 868 போலீசாரில் 15 பேர் கொரோனா தொற்றில் இறந்ததும், தடுப்பூசியின் ஒரு டோஸ் போட்டுக்கொண்ட 35 ஆயிரத்து 856 பேரில் 9 பேர் இறந்ததும் தெரியவந்தது. ஆனால் 2 டோஸ்களும் போட்டுக்கொண்ட 42 ஆயிரத்து 720 பேரை ஆய்வுக்கு உட்படுத்தியதில் 2 பேர் மட்டுமே பலியானது கண்டுபிடிக்கப்பட்டது.

இதை சுட்டிக்காட்டிய வி.கே.பால், ‘போலீசார் அதிக ஆபத்தான சூழலில் பணியாற்றுவதால் அவர்களிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இந்த ஆய்வின்படி, ஒரு டோஸ் தடுப்பூசி 92 சதவீதம் பாதுகாப்பானது என்றும், 2 டோஸ்கள் 98 சதவீதம் பாதுகாப்பானது என்றும் தெரியவந்துள்ளது’ என்று கூறினார்.

spot_imgspot_img

More like this
Related

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக மோசடி: முல்லைத்தீவு செய்தியாளர் கைது!

வெளிநாட்டுக்கு ஆட்களை அனுப்புவதாக குறிப்பிட்டு நிதி மோசடியில் ஈடுபட்ட குற்றச்சாட்டில், முல்லைத்தீவு...

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.திசாநாயக்கவின் சகோதரர் கைது!

முன்னாள் அமைச்சர் எஸ்.பி. திசாநாயக்கவின் சகோதரரும், முன்னாள் மாகாண சபை உறுப்பினருமான...

கபிலசந்திரசேனவின் மனைவிக்கு பிடியாணை

ஏர்பஸ் பரிவர்த்தனை தொடர்பான விசாரணையின் ஒரு பகுதியாக, முன்னாள் ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ்...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்