2008-ம் ஆண்டு கவுதம் வாசுதேவ் மேனன் இயக்கத்தில் சூர்யா, சமீரா ரெட்டி, சிம்ரன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளிவந்து ஹிட் அடித்தப் படம் வாரணம் ஆயிரம். வித்தியாசமான காதல் கதையை களமாக வைத்து எடுக்கப்பட்ட இப்படம் இளைஞர்கள் மனதில் இன்றும் நீங்கா இடம் பிடித்துள்ளது. மீண்டும் இந்த கூட்டணியை காண பலரும் காத்திருந்த நிலையில், எதிர்பாரத விதமாக 12 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சூர்யாவை வைத்து இயக்கவுள்ளார் கவுதம்.
மணிரத்னம் தயாரிப்பில் நவரசங்களை அடிப்படியாகக் கொண்டு ஆந்தாலஜி தொடரை 9 இயக்குநர்கள் இயக்கி உள்ளனர். கொரோனாவால் கடும் பாதிப்பை சந்தித்துள்ள திரையுலகிற்கு நிதி திரட்டும் நோக்கில் ‘நவரசா’ என்கிற ஆந்தாலஜி வெப் தொடர் உருவாகி வருகிறது. மணிரத்னம், கெளதம் மேனன், கே.வி.ஆனந்த், பிஜாய் நம்பியார், பொன்ராம், ரதீந்திரன், அரவிந்த் சாமி, சித்தார்த் மற்றும் கார்த்திக் நரேன் என 9 இயக்குநர்கள் ஒரு ஒரு நவரசத்தைக் கொண்டு பாகங்களை இயக்கியுள்ளனர்.
அதில் கவுதம் வாசுதேவ் மேனன் சூர்யாவை வைத்து ஒரு பாகத்தை இயக்கியுள்ளார். இதில் சூர்யாவுக்கு ஜோடியாக பிரயாகா மார்டின் நடித்துள்ளார். இந்தப் பாகத்திற்கு “ கிட்டார் கம்பி மேலே நின்று” என தலைப்பு வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆந்தாலஜி தொடர் வரும் ஆகஸ்ட் மாதம் ஓடிடி தளத்தில் வெளியாகிறது.