விஷாலின் 31வது படத்தில் பிரபல மலையாள நடிகர் ஒருவர் வில்லனாக நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
நடிகர் விஷாலின் 31வது படம் வேகமாக வளர்ந்து வருகிறது. இந்த படத்தை குறும்பட இயக்குனர் து.பா.சரவணன் இயக்கி வருகிறார். இந்த படத்தின் மோஷன் போஸ்டர் ‘நாட் காமன் பேன்’ என்ற வித்தியாசமான பெயரோடு வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது. இந்த படத்தில் விஷாலுக்கு ஜோடியாக டிம்பிள் ஹயாதி நடித்து வருகிறார். விஷாலின் சொந்த நிறுவனமான வி.எப்.எப் நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.
தமிழ், தெலுங்கு என இருமொழிகளில் உருவாகும் இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைத்து வருகிறார். கடந்த மாதமே தொடங்கப்பட வேண்டிய இப்படத்தின் படப்பிடிப்பு கொரானாவின் இரண்டாம் அலை காரணமாக தடைப்பட்டது. இதையடுத்து கொரானா தொற்று குறைந்து ஊடரங்கு தளர்வில் படப்பிடிப்புக்கு அனுமதியளிக்கப்பட்டது. இதன் காரணமாக சில நாட்களுக்கு முன்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் படப்பிடிப்பு தொடங்கியது.
ஏற்கனவே இந்த படத்தில் உருவாகும் சண்டைக்காட்சிகளை வெளியிட்டிருந்தார் விஷால். ஒரே ஷெட்டியூலில் முடிக்க படுவேகமாக இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் இப்படம் குறித்து புதிய தகவல் ஒன்று வெளியாகியுள்ளது. அதன்படி ஜனா, ஸ்கெட்ச் போன்ற படங்களில் நடித்து புகழ்பெற்ற பிரபல மலையாள நடிகர் பாபுராஜ் இந்த படத்தில் வில்லனாக நடிக்க ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.