மூத்த அல்கொய்தா தலைவர் இப்ராஹிம் அகமது மஹ்மூத் அல்-கோசியின் மேலதிக அடையாளம் அல்லது இருப்பிடம் குறித்த தகவல்களை வழங்குபவர்களிற்கு 4 மில்லியன் டொலர் சன்மானத்தை அமெரிக்கா அறிவித்துள்ளது. ஈடாக வெகுமதியை வழங்குவதாக வெளியுறவுத்துறை வியாழக்கிழமை அறிவித்தது.
அரேபிய தீபகற்பத்தில் அல்-கொய்தாவின் தற்போதைய தலைமையாக அல்-கோசி தரப்பு உள்ளதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
அவர் 2014 இல் அல்கொய்தாவில் இணைந்ததாக அமெரிக்கா தெரிவித்துள்ளது. ஆனால் பல தசாப்தங்களாக அல்-கொய்தாவில் தீவிரமாக செயல்பட்டு வருகிறார், மேலும் ஒசாமா பின்லேடனுக்காக பல ஆண்டுகளாக நேரடியாக பணியாற்றினார் என்று இராஜாங்க திணைக்களம் வெளியிட்ட அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இணையத்தள பிரச்சாரங்களின் மூலம் அமெரிக்காவிற்கு எதிரான தாக்குதல்களை அவர் ஊக்குவிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
2001 டிசம்பரில் அல்-கோசி பாகிஸ்தானில் கைது செய்யப்பட்டுள்ளார். பின்னார் குவாண்டனாமோ சிறைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளார்.
ஒரு இராணுவ விசாரணை ஆணைக்குழுமுன் நடந்த விசாரணையில், அல்கொய்தாவுடன் சதித்திட்டம் தீட்டியது, பயங்கரவாதத்திற்கு பொருள் ஆதரவை வழங்கியது உள்ளிட்ட குற்றச்சாட்டுக்களை, அவர் 2010 ல் ஒப்புக்கொண்டார். எவ்வாறாயினும், அவர் ஒரு முன்கூட்டிய ஒப்பந்தத்தின் படி 2012 இல் விடுவிக்கப்பட்டு சூடானுக்குத் திரும்பினார்.
அதன் பின்னர் மீண்டும் அமெரிக்காவிற்கு எதிராக செயற்படுவதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
Reward! Up to $10 Million for Information
IBRAHIM AL-QOSI
If you have information on this AQAP terrorist , text us. You could be eligible for a reward.https://t.co/DZlEqP9CZc pic.twitter.com/nhZsJp0OZH
— Rewards for Justice (@RFJ_USA) July 1, 2021
பயங்கரவாதிகள் இருக்கும் இடம் குறித்த தகவல்களுக்கு ஈடாக அமெரிக்கா பெரும்பாலும் 3 மில்லியன் டொலர் முதல் 10 மில்லியன் டொலர் வரை வெகுமதிகளை வழங்குகிறது.