29.8 C
Jaffna
March 29, 2024
இலங்கை

மனிதக்கடத்தல் தொடர்பான அமெரிக்க அறிக்கையில் இலங்கை தொடர்ந்தும் கண்காணிப்பில்!

மனித கடத்தல் தொடர்பில் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்தின் வருடாந்த அறிக்கையில், இலங்கை 2வது அடுக்கில் இடம்பெற்றுள்ளது.

கடந்த வியாழக்கிழமை இந்த அறிக்கை வெளியானது.

“இலங்கை அரசு கடத்தலை ஒழிப்பதற்கான குறைந்தபட்ச தரங்களை முழுமையாக பூர்த்தி செய்யவில்லை; இருப்பினும், அவ்வாறு செய்ய இது குறிப்பிடத்தக்க முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த முயற்சிகளில் அரசு அனாதை இல்லத்தில் குழந்தைகளின் பாலியல் சுரண்டல் தொடர்பான குற்றச்சாட்டுகளை விசாரித்தலும் அடங்கும்“ என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆட்கடத்தல் தடுப்பு பயிற்சி மற்றும் விழிப்புணர்வு செயற்பாட்டில், சர்வதேச அமைப்புகளுடன் அரசாங்கம் தொடர்ந்து பணியாற்றி வருவதாக அறிக்கை தெரிவித்துள்ளது.

இருப்பினும், முந்தைய அறிக்கையிடல் காலத்துடன் ஒப்பிடும்போது ஒட்டுமொத்தமான வளர்ச்சியை இலங்கை அரசாங்கம் நிரூபிக்கவில்லை.

இலங்கையின் தொடர்ச்சியான மூன்றாவது ஆண்டாக அடுக்கு 2 கண்காணிப்பு பட்டியலில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஞானசாரர் வைத்தியசாலையில்

Pagetamil

வட்டுக்கோட்டை இளைஞன் கொலை: கைதான ரௌடிகளின் தொலைபேசி உரையாடல் அறிக்கையை பெற அனுமதி!

Pagetamil

யாழ் போதனா மருத்துவ கழிவு பிரச்சினைக்கு தீர்வு: கோம்பயன் மயானத்தில் எரியூட்டி திறப்பு!

Pagetamil

கிளிநொச்சி ஆயுர் வேத வைத்தியசாலைகளில் மருந்துக்களுக்கு தட்டுப்பாடு

Pagetamil

பெரமுனவுக்கும் அதிகரிக்கும் பிளவு!

Pagetamil

Leave a Comment