நடிகர் சிம்பு மற்றும் ஹன்சிகா இணைந்து நடித்துள்ள ‘மஹா’ படத்தின் டீசர் வெளியாகியுள்ளது.
தமிழ் திரையுலகில் முன்னணி நடிகையாக இருப்பவர் ஹன்சிகா. தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி என பல மொழிப் படங்களில் நடித்து வருகிறார். தற்போது இவர் நடிப்பில் வெளியாகவுள்ள திரைப்படம் ‘மஹா’. ஹன்சிகாவின் 50வது படமாக உருவாகியுள்ள இப்படத்தில் நடிகர் சிம்பு சிறப்புத்தோற்றத்தில் நடித்துள்ளார். இப்படத்தை ‘ரோமியோ ஜூலியட்’ படத்தின் இயக்குநர் லக்ஷ்மணிடம் உதவி இயக்குநராகப் பணியாற்றிய ஜமீல் இயக்குகியுள்ளார்.
நடிகர் ஶ்ரீகாந்த் முக்கிய வேடத்தில் நடிக்கும் இப்படத்தை Etcetera Entertainment நிறுவனம் தயாரித்துள்ளது. இப்படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்துள்ளார். ஏற்கனவே இந்த படத்தின் போஸ்டர்கள் வெளியாகி சர்ச்சையை கிளப்பியது. அதன்பிறகு தயாரிப்பாளர் தனக்கு தெரியாமல் படத்தை ரிலீஸ் செய்ய திட்டமிடுகிறார் என இயக்குனர் ஜமீல் நீதிமன்றம் சென்று பிரச்சனை முடிவுக்கு வந்தது.
இப்படி பல சர்ச்சைகளுக்கு நடுவே நீண்ட நாள் கழித்து இப்படம் ரிலீசாக உள்ளது. இந்த படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய படத்தயாரிப்பாளர் முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இப்படத்தின் டீசர் இன்று வெளியாகியுள்ளது. த்ரில்லரில் பயமுறுத்தும் வகையில் உருவாகியுள்ள இந்த டீசரை நடிகர் சிவகார்த்திகேயன் தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். இந்த டீசருக்கு ரசிகர்கள் வரவேற்பு தெரிவித்துள்ளனர்.