31.1 C
Jaffna
April 14, 2025
Pagetamil
சினிமா

திருத்தத்தை கைவிட வேண்டும் ; சூர்யாவை தொடர்ந்து கார்த்தியும் கடும் எதிர்ப்பு!

ஜனநாயக நாட்டில் கருத்துச் சுதந்திரத்தின் குரல்வளையை நசுக்கும் விதமாக ஒளிப்பதிவு சட்டம் உள்ளது என நடிகர் கார்த்தி தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் திரைப்பட வெளியீட்டை முறைப்படுத்தும் வகையில் புதிய சட்டத்தை மத்திய அரசு கொண்டு வரவுள்ளது. திரைப்படங்களை தணிக்கை செய்யும் அதிகாரம் இதுவரை தணிக்கைத்துறையிடம் இருந்து வருகிறது. ஆனால் இனி திரைப்படங்கள் மீது யாரேனும் ஆட்சேபம் தெரிவித்தால், மத்திய நேரடியாக தலையிட்டு முடிவு எடுக்கும் வகையில் சட்ட திருத்தம் செய்யப்படவுள்ளது.

இதற்கு இந்தியா முழுவதும் கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. அதேபோன்று தமிழ் திரையுலகினரும் தங்களது கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர். ஏற்கனவே நடிகர் சூர்யா இச்சட்டத் திருத்தத்திற்கு எதிர்ப்பு தெரிவித்துள்ளார். இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், சட்டம் மக்களை காக்கவேண்டும், குரல்வளையை நெரிக்கக்கூடாது என பதிவிட்டிருந்தார்.

இந்நிலையில் சூர்யாவை தொடர்ந்து நடிகர் கார்த்தியும், இந்திய அரசு மேற்கொள்ள உள்ள திருத்தத்தை கைவிட வேண்டும் என தெரிவித்துள்ளார். இது குறித்து வெளியிட்டுள்ள பதிவில், சென்சார் சான்றிதழை ரத்து செய்யும் அதிகாரம் மத்திய அரசின் அதிகார வரம்புக்கு செல்வது வியாபார ரீதியாக ஒவ்வொரு படத்தையும் பாதிக்கக்கூடும். அதனால் ஒளிப்பதிவு சட்டத்தில் மேற்கொள்ளப்பட உள்ள திருத்தத்தை மத்திய அரசு கைவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

இதையும் படியுங்கள்

நடிகர் ஸ்ரீயின் உடல்நிலை குறித்த வதந்தி: தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு விளக்கம்

Pagetamil

முந்தைய அஜித் படங்களின் வசூலை முறியடிக்குமா ‘குட் பேட் அக்லி’?

Pagetamil

ஒரு பாடலுக்கு மீண்டும் நடனமாடும் தமன்னா!

Pagetamil

அட்லீ இயக்கத்தில் அல்லு அர்ஜுன் – இது ‘ஹாலிவுட்’ லெவல்!

Pagetamil

‘மஞ்சும்மல் பாய்ஸ்’ சாதனையை முறியடித்த ‘எம்புரான்’!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!