நடிகர் சூர்யா சமீபத்தில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட நிலையில், தன்னுடைய நிறுவனத்தில் பணி புரியும் ஊழியர்களுக்காக முயற்சி ஒன்றை எடுத்துள்ளார்.
இந்தியாவில் கடந்த சில மாதங்களாக வேகமாக பரவி வந்த கொரோனா தொற்றின் 2வது அலை, தற்போது படிப்படியாக குறையத் தொடங்கி உள்ளது. கொரோனா பரவலை கட்டுப்படுத்த நாடு முழுவதும், தடுப்பூசி போடும் பணி கடந்த ஜனவரி மாதம் முதல் நடைபெற்று வருகிறது. அரசியல் பிரபலங்களும், சினிமா நட்சத்திரங்களும் தடுப்பூசி போட்டுக்கொண்ட புகைப்படத்தை சமூக வலைதளத்தில் பதிவிட்டு விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த நிலையில் நடிகர் சூர்யா தன்னுடைய தயாரிப்பு நிறுவனமான 2டி என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தில் பணி புரிபவர்கள் தடுப்பூசி எடுத்துக் கொள்ளும் வகையில் வரும் ஜூலை 6 மற்றும் 7ம் திகதி சென்னை மாநகராட்சியுடன் இணைந்து தடுப்பூசி முகாம் ஒன்றை நடத்த திட்டமிட்டுள்ளார்.