நவக்கிரகங்களில், சனிபகவானை ஆயுள்காரகன் என்று சொல்வார்கள். சனியின் ஆதிக்கத்தை பொருத்துதான் ஒருவரின் ஆயுள் காலத்தை நிர்ணயிக்க முடியும். ஆனால், அந்த கிரகத்தையும் கட்டுப்படுத்துபவர் பெருமாள். சனிக்கு அதிபதியான பெருமாளுக்கு சனிக்கிழமைகளில் விரதம் இருந்து வழிபட உகந்த நாட்கள்.
சனிக்கிழமை விரதம் இருப்பவர்கள் அதிகாலை எழுந்து குளித்து முடித்த பின்னர் நெற்றியில் திருநாமம் தரித்து ஓம் நமே நாராயணாய என்று உச்சரித்து விரதத்தை ஆரம்பிக்கலாம். அன்றைய தினம் முழுவதும் உணவு அருந்தால் விரதம் அனுஷ்டிக்க வேண்டும். அசைவம் சாப்பிடக்கூடாது. மாலையில் பெருமாள் கோவிலுக்கு சென்று நெய் தீபம் ஏற்றி வழிபடுவது அவசியம். மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலையில் குளித்துவிட்டு பெருமாளை வணங்கிய பின்பு எப்போதும் போல உணவுகளை உண்ணலாம்.
அருகில் கோவில் இல்லாதவர்கள் வீட்டிலேயே பெருமாளின் படத்தை வைத்து வழிபாடு செய்யலாம்.
ஒவ்வொரு சனிக்கிழமையும் தொடர்ந்து விரதம் கடைபிடித்து வந்தால் சனி பகவானின் முழு அருளும் கிடைக்கப்பெற்று நீண்ட நாட்கள் வாழும் ஆயுளை வழங்குவார்.
புரட்டாசி மாதங்களில் வரும் சனிக்கிழமைகள் மிகவும் விசேஷமானவை. இதுவரை விரதம் இருக்காதவர்கள், புரட்டாசி மாத சனிக்கிழமைகளில் விரதம் அனுஷ்டித்தால், சகல செல்வமும் பெற்று வாழலாம்.
இப்படி விரதம் இருப்பதன் மூலம் சனிக் கிரகத்தின் ஆதிக்கத்தில் இருந்து தங்களைக் காத்துக் கொள்ள முடியும். ஜாதகத்தில் சனியினால் ஏற்படும் கெடுபலன்களை குறைத்துக் கொள்ள, சனிக்கிழமைகளில் விரதம் இருக்க வேண்டும்.