புறக்கோட்டை பகுதியில் சிறுமியை பயன்படுத்தி நகைத்திருட்டில் ஈடுபட்ட குழு கைது செய்யப்பட்டுள்ளது.
கடந்த 23ஆம் திகதி இந்த நகைத்திருட்டு இடம்பெற்றது.
நகை வாங்கும் போர்வையில் கடைக்கு வந்த ஒரு குழு கைவரிசையை காட்டியிருந்தது. இது குறித்த சிசிரிவி கமரா கட்சிகளை பொலிசார் வெளியிட்டிருந்தனர். இதன்படி, ஆமர் வீதி பகுதியில் இந்த குழு கைதானது.
தாயும் பாட்டியும் நகைகளைத் தேர்ந்தெடுத்துக் கொண்டிருந்தபோது, ஆறு வயது சிறுமி மற்றொரு நபரின் உதவியுடன் நகைகளைத் திருடியதாக பொலிசார் கூறுகின்றனர். சிறுமி தனது தாய் மற்றும் பாட்டியால் நகைகளைத் திருட பயிற்சியளிக்கப்பட்டார் என்பதும் தெரிய வந்துள்ளது.
புறக்கோட்டை, மட்டக்களப்பு நகர், ஏறாவூர், அனுராதபுரம், காலி, திகன, கிருலப்பனை மற்றும் குருநாகல் காவல் நிலையங்களில் அவர்கள் மீது பல புகார்கள் உள்ளன என்பது தெரிய வந்துள்ளது.
அவர்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் வாடகை வீடுகளில் தங்கி, நகைத் திருட்டில் ஈடபட்டு வருவதாகவும், இதுவரை 1.5 மில்லியனுக்கும் அதிகமான பொருட்கள் திருடப்பட்டுள்ளதாகவும் போலீசார் தெரிவித்துள்ளனர்.
46,23 வயதான இரண்டு பெண்களும்,79 வயதான ஆணுமே கைது செய்யப்பட்டனர்.