கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறிய குற்றச்சாட்டில் 325 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கம்பளையில் 64 பேரும், கண்டியில் 61 பேரும் கைது செய்யப்பட்டனர்.
அதன்படி, கடந்த ஆண்டு ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் 46,260 பேர் இதே போன்ற குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்டுள்ளனர்.
மேற்கு மாகாணத்திற்குள் உள்நுழையும், வெளியேறும் 14 இடங்களில் நேற்று 3,337 வாகனங்களில் பயணித்த 6,549 நபர்கள் பரிசோதிக்கப்பட்டனர். அத்தியாவசிய தேவையின்றி மாகாண எல்லையை கடக்க முயன்ற 75 வாகனங்களில் 170 பேர் திருப்பி அனுப்பப்பட்டனர்.