தன்னுடைய அதிரடியான இசையின் மூலம் ரசிகர்களை கவர்ந்தவர் ‘ஹிப்ஹாப்’ ஆதி. இசையமைப்பாளராக சினிமாவில் கால்பதித்த இவர், தற்போது நடிப்பின் மீதும் அதிகமாக கவனம் செலுத்தி வருகிறார். ஆதி நடிப்பில் வெளியான ‘மீசையை முருக்கு’, ‘நட்பே துணை’, ‘நான் சிரித்தால்’ ஆகிய திரைப்படங்களுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. தமிழ் சினிமாவின் இளம் ஹீரோவாக உள்ள ஆதி, தற்போது அடுத்தடுத்த படங்களில் நடித்து வருகிறார்.
தற்போது ஆதி நடித்து வெளிவர காத்திருக்கும் திரைப்படம் ‘சிவகுமாரின் சபதம்’. ஆதியே இயக்கியுள்ள இப்படத்தை சத்ய ஜோதி பிலிம்ஸ் தயாரித்து வருகிறது. ஏற்கனவே இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இந்த படத்தின் ஃப்ர்ஸ்ட் சிங்கிள் டிராக் வெளியிடும் தேதியை படக்குழு அதிகாரப்பூர்வ வெளியிட்டுள்ளது. அதன்படி ‘சிவக்குமார் பொண்டாட்டி’ என தொடங்கும் அந்த பாடலை வரும் ஜூலை 2 வெளியிடப்படுகிறது.
இந்த படத்திற்கு பிறகு ஆதி ‘அன்பறிவு’ என்ற படத்தில் ஹீரோவாக நடித்து வருகிறார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கும் இப்படத்தை அட்லியிடம் உதவி இயக்குனராக இருந்த அஸ்வின் ராம் இயக்கி வருகிறார். ஆதியே இசையமைக்கும் இப்படத்தில் காஷ்மீரா கதாநாயகியாக நடித்து வருகிறார். நடிகர் நெப்போலியன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கும் இப்படத்தில் விதார்த், சாய்குமார், ஊர்வசி, விஜய் டீவி தீனா, சங்கீதா உள்ளிட்டோர் நடிக்கின்றனர். ஆதி முதல்முறையாக இரட்டை வேடத்தில் நடிக்கும் இப்படத்தின் ஃப்ர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.