Pagetamil
சினிமா சின்னத்திரை

வெறித்தனமாய் டான்ஸ் ஆடும் விஜய் சேதுபதி.. வைரலாகும் மாஸ் வீடியோ!

நடிகர் விஜய் சேதுபதி செம்மயாக குத்து டான்ஸ் ஆடும் வீடியோ ஒன்று வெளியாகி சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

தனித்துவமான நடிப்பை வெளிப்படுத்தி ரசிகர்களை கவர்ந்து வருகிறார் விஜய் சேதுபதி. ஆரம்பத்தில் அவர் நடித்த ‘பீட்சா’, ‘சூது கவ்வும்’ உள்ளிட்ட திரைப்படங்கள் நல்ல வரவேற்பை பெற்றன. எந்த வேடம் கொடுத்தாலும் சிறப்பாக நடிக்கும் திறமை இவரிடம் உண்டு. தற்போது இந்திய சினிமாவின் தவிர்க்கமுடியாத நடிகர்களில் இவரும் ஒருவர். யாரும் எதிர்பார்க்காத நேரத்தில் விஜய்யுடன் மாஸ்டர்’ வில்லனாக நடித்து அனைவரின் பாராட்டையும் பெற்றார். தமிழை தாண்டி தெலுங்கு, இந்தி படங்களில் நடித்து வருகிறார். தற்போது ஏராளமான படங்களை கைவசம் வைத்துள்ளார்.

சினிமாவில் பிசியாக நடித்துக்கொண்டிருக்கும் மிகப்பெரிய நடிகரான விஜய் சேதுபதி. தற்போது தொலைக்காட்சி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கவுள்ளார் என்பது ஆச்சர்யமான விஷயம். அந்த வகையில் தற்போது சன் டிவியில் பிரம்மாண்டமாக ஒளிப்பரப்பாக இருக்கிற சமையல் நிகழ்ச்சி ‘மாஸ்டர் செஃப்’. சர்வதேச அளவில் புகழ்பெற்ற இந்த நிகழ்ச்சியின் புரோமோக்கள் அடுத்தடுத்து ‘சன் டி.வி-யில்’ வெளியிடப்பட்டு வருகிறது. அதில் விஜய் சேதுபதி தோன்றி ரசிகர்களை கவர்ந்துள்ளார்.

 

இந்நிகழ்ச்சி எப்போது ஒளிப்பரப்பாகும் என அனைவரும் ஆவலுடன் எதிர்ப்பார்த்து காத்திருக்கும் நிலையில் ‘மாஸ்டர் செஃப்’ நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்து வருகிறது. இந்த படப்பிடிப்பின்போது செட்டில் விஜய் சேதுபதி செம்ம டான்ஸ் ஆடியுள்ளார். மரண மாஸாக உள்ள அந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளத்தில் டிரெண்டிங்கில் உள்ளது. ரசிகர்களும் வீடியோவை பார்த்து லைக் செய்து வருகின்றனர். இதற்கிடையே தெலுங்கில் இதே நிகழ்ச்சியை நடிகை தமன்னா தொகுத்து வழங்கவுள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு இந்த நிகழ்ச்சியின் படப்பிடிப்பு நடந்தபோது விஜய் சேதுபதியும், தமன்னாவு சந்தித்துக்கொண்டனர். அப்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது குறிப்பிடத்தக்கது.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

அஜித்தின் ‘குட் பேட் அக்லி’ ஏப்ரல் 10இல் ரிலீஸ்

Pagetamil

நடிகர் விஷாலுக்கு உடல்நல பாதிப்பு – பிரச்சினை என்ன?

Pagetamil

Leave a Comment