மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் முன்வைக்கப்படவில்லை என்று இந்தியா தெரிவித்துள்ளது.
இது தொடர்பில் இந்திய உயர் ஸ்தானிகராலய பேச்சாளரினால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
மூன்றாம் நாடொன்றுடன் இணைந்து கூட்டு இராணுவப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கையின் வான்பரப்பை பயன்படுத்த இந்தியா விடுத்த கோரிக்கையை இலங்கை அதிகாரிகள் நிராகரித்திருப்பதாக சில ஊடகங்களில் செய்திகள் வெளியாகியுள்ளன.
இவை முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்திகளென இந்திய உயர் ஸ்தானிகராலயம் மறுப்புத் தெரிவிக்கின்றது.
மூன்றாவது நாடொன்றுடன் இணைந்து கூட்டுப்பயிற்சியில் ஈடுபடுவதற்காக இலங்கை வான்பரப்பை பயன்படுத்துவதற்கான எந்தவொரு கோரிக்கைகளும் அண்மைய காலங்களில் இந்தியாவால் விடுக்கப்பட்டிருக்கவில்லை என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.