25.9 C
Jaffna
December 27, 2024
Pagetamil
இலங்கை

யாழ் மாவட்டத்தில் 2ஆம் கட்ட தடுப்பூசி தொடர்பான முக்கிய அறிவிப்பு!

யாழ் மாவட்டத்தில் கோவிட்-19 நோய்க்கு எதிரான இரண்டாம் கட்ட தடுப்பூசி வழங்கல் திட்டம் தொடர்பாக வடமாகாண மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ. கேதீஸ்வரன் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு-

யாழ் மாவட்டத்தில் கடந்த மே மாத இறுதியிலும் யூன் மாத ஆரம்பத்திலும் கோவிட்-19 நோய்க்கு எதிரான சினோபாம் முதலாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் இடம்பெற்றன.

இரண்டாம் கட்ட தடுப்பூசியேற்றும் பணிகள் கடந்த யூன் 28 ஆம் திகதிமுதல் யாழ் மாவட்டத்தில் இடம் பெற்றுவருகின்றன.

கடந்த 28 ஆம் திகதி 10,110 பேரும், 29 ஆம் திகதி 13,182 பேரும், 29 ஆம் திகதி 10,090 பேரும், மொத்தமாக கடந்த மூன்று நாட்களிலும் 33,382 பேர் யாழ் மாவட்டத்தில் 2வது தடுப்பூசியினை பெற்றுக்கொண்டுள்ளனர்.

தொடர்ந்து யூலை 01ஆம் 02ஆம் திகதிகளிலும் சுகாதார வைத்திய அதிகாரிகளால் ஒழுங்கு செய்யப்பட்ட நிலையங்களில் தடுப்பூசி வழங்கும் பணிகள் இடம்பெறும். இந்த ஐந்து நாட்களிலும் இரண்டாவது தடுப்பூசியினை பெற தவறியவர்களுக்கு எதிர்வரும் யூலை 03ஆம் திகதி சனிக்கிழமை அந்தந்த பிரதேசத்திற்குரிய சுகாதார வைத்திய அதிகாரி பணிமனைகளில் காலை 8.00 மணி முதல் தடுப்பூசி வழங்கப்படும்.

தடுப்பூசி அல்லது வேறு மருந்துகளிற்கு ஒவ்வாமை உடையவர்களுக்கு முதற்கட்ட தடுப்பூசி யாழ் போதனா வைத்திய சாலையிலும், தெல்லிப்பளை, பருத்தித்துறை, சாவகச்சேரி, ஊர்காவற்துறை ஆதார வைத்திய சாலைகளிலும் வழங்கப்பட்டிருந்தது. இவர்களுக்கான 2வது தடுப்பூசி எதிர்வரும் யூலை 03ஆம் திகதி சனிக்கிழமை காலை 8.00 மணி முதல் இதே வைத்தியசாலைகளில் வழங்கப்படும். எனவே தவறாது குறிக்கப்பட்ட இந்த தினத்தில் சமூகமளித்து உங்களுக்கான 2வது தடுப்பூசியினை பெற்றுக்கொள்ளவும்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

யாழில் இளம் குடும்பஸ்தர் உயிரிழப்பு

east tamil

யாத்திரைகளை துன்புறுத்திய 22 பேர் கைது

east tamil

வெடுக்குநாறிமலையில் நிம்மதியான வழிபாட்டுக்கு வழி வேண்டும் – துரைராசா ரவிகரன்

east tamil

முன்னாள் அமைச்சர் ஐவருக்கு விசாரணை

east tamil

விமானத்திற்குள் உயிரிழந்த இலங்கை பெண்

east tamil

Leave a Comment