மத்திய அரவை ஒன்றிய அரசு என்று அழைக்க எந்தவிதமான தடையும் இல்லை என்று உயர்நீதிமன்ற மதுரை கிளை தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் திமுக அரசு பொறுப்பேற்ற பிறகு, மத்திய அரசை ஒன்றிய அரசு ஒன்று அழைப்பதை முதலமைச்சர் மற்றும் அமைச்சர்கள் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இதற்கு பாஜக உள்ளிட்ட கட்சியினர் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், ஒன்றிய அரசு என மத்திய அரசை அழைப்பதை தடை விதிக்கக்கோரி உயர்நீதிமன்ற மதுரை கிளையில் பழனியைச் சேர்ந்த ராமசாமி என்பவர் பொதுநல வழக்கு தொடர்ந்தார்.
இந்த வழக்கு இன்று விசாரணைக்கு வந்த போது, கொரோனா தடுப்பூசியை போட்டுக் கொள்ளுமாறு ஒருவரை கட்டாயப்படுத்தக் கூடாது என்று உச்சநீதிமன்றம் தெரிவித்துள்ள நிலையில், ஒருவரை இப்படித்தான் பேச வேண்டும் என்று எவ்வாறு உத்தரவிட முடியும்…? என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர்.
எனவே, மத்திய அரசை ஒன்றிய அரசு என அழைக்க தடை விதிக்க முடியாது எனக் கூறி வழக்கை தள்ளுபடி செய்தனர்.