உலகம்

பிரான்சில், செப்டம்பரில் கொரோனா 4-ம் அலை ஏற்பட வாய்ப்பு – அறிவியல் ஆலோசகர் அதிர்ச்சி தகவல்!

கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் 4ம் அலையிலிருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அறிவியல் ஆலோசகர் கூறியுள்ளார்.

உலகையே ஆட்டிப்படைத்து வரும் கொரோனா புதுப்புது அவதாரம் எடுத்து மக்களை வேட்டையாடி வருகிறது. பிரான்சில் ஏற்கனவே 3 அலைகளாக உருமாறி காவு வாங்கிய கொரோனா, வரும் செப்டம்பர் மாதத்தில் 4-ம் அலையாக உருவெடுக்கும் என்று அறிவியல் ஆலோசகர் ஒருவர் அதிர்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.

பிரான்சில் கடந்த சில நாட்களாக டெல்டா பிளஸ் கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இது 4-வது அலைக்கு வித்திடும். செப்டம்பர் அல்லது அக்டோபர் மாதத்தில் 4-வது அலையின் வீரியம் அதிகமாக இருக்கும் என அரசின் அறிவியல் ஆலோசகரும், பேராசிரியருமான ஜீயன் பிரான்சிஸ் டெல்பிரைசி தெரிவித்துள்ளார்

இருப்பினும் 2 டோஸ் தடுப்பூசி போட்டுக்கொண்டவர்கள் இதில் இருந்து தப்பித்துக்கொள்ளலாம் என்றும், தடுப்பூசி போடுவதை தீவிரபடுத்த வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

ஆங் சான் சூகி வீட்டுக்காவலுக்கு மாற்றப்பட்டார்

Pagetamil

ஈரான் ஏவுகணைகளை இடைமறிப்பதில் சவுதி பங்கேற்கவில்லை!

Pagetamil

அவுஸ்திரேலியாவில் மத வழிபாட்டிடத்தில் கத்திக்குத்து!

Pagetamil

போர் பதட்டத்தை தணிக்க வலியுறுத்தும் உலக தலைவர்கள்

Pagetamil

ரஷ்ய பாணியில் பரிசோதனை தாக்குதல் நடத்திய ஈரான்!

Pagetamil

Leave a Comment