24.2 C
Jaffna
January 7, 2025
Pagetamil
இலங்கை

கப்பல் விபத்தில் தவறான தகவல் வெளியிட்ட அமைச்சர் பதவி விலக வேண்டும்!

சுற்றுச்சூழல் பாதிப்பு பற்றி புரியாமல் எக்ஸ்பிரஸ் பேர்ள் கப்பல் விபத்தை திசைதிருப்பும் விதமாக பேசியதற்காக இராஜாங்க அமைச்சர் நாலக கோதவேவா பதவியிலிருந்து விலகி, சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென ஓமல்பே சோபித தேரர் தெரிவித்துள்ளார்.

எம்பிலிப்பிட்டியில் ஊடகங்களுடன் பேசிய தேரர். இராஜாங்க அமைச்சர் கோதவேவ தனது இலாகாவிலிருந்து ராஜினாமா செய்ய வேண்டும் என்றார்.

நாடு பேரழிவிற்கு ஆளான ஒரு நேரத்தில் கடல் விலங்குகளின் இறப்பு இயற்கை காரணங்களால் ஏற்பட்டதாக அமைச்சர் கூறியதாகவும், நாடு பேரழிவிற்குள்ளான ஒரு நேரத்தில், சம்பவத்தின் பின்னணியில் உள்ள உண்மையை தீர்மானிக்க முயற்சித்து வருகையில் அமைச்சர் இவ்வாறு பேசியுள்ளதாகவும் தெரிவித்தார்.

20 டொல்பின்கள், 176 கடல் ஆமைகள், மற்றும் நான்கு திமிங்கலங்கள் உயிரிழந்துள்ளதாக நிபுணர்குழு சமர்ப்பித்துள்ள அறிக்கையை சுட்டிக்காட்டினார்.

எக்ஸ்பிரஸ் பேர்ள் சம்பவத்தில் தொடர்புடைய அனைத்து நபர்களும்- பொதுமக்களை தவறாக வழிநடத்துபவர்கள் உட்பட- சட்டத்தால் தண்டிக்கப்பட வேண்டும். விசாரணைகளுக்கு இடையூறு செய்வது மற்றும் சம்பவத்திற்கு ஆதரவாக பேசுவபவர்கள் பதவிகளை ராஜினாமா செய்யுங்கள் என்றார்.

அத்துடன், சூம் வழியாக நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்த நீதி அமைச்சர் அலி சப்ரி முன்வைத்த முன்மொழிவை ஓமல்பே சோபித தேரர் ஆட்சேபித்தார்.

சூம் மூலம் நடத்தப்படும் அனைத்து நடைமுறைகளும் அமெரிக்காவில் உள்ள அவர்களின் தலைமையகத்தில் பதிவு செய்யப்பட்டு, அறிக்கையிடப்பட்டு சேமிக்கப்படும் என்று கூறினார்.

சூம் மூலம் நீதிமன்ற நடவடிக்கைகளை நடத்துவதன் மூலம் தரவு உலக அரங்கில் காண்பிக்கப்படும். நீதிமன்ற இரகசியங்கள் வெளியிடப்படுவதைத் தடுப்பதற்காக சிறப்பு அனுமதியின்றி உள்ளூர் நீதிமன்றங்களில் வெளிநாட்டு பிரஜைகள் அல்லது வெளிநாட்டு வழக்கறிஞர்கள் அனுமதிக்கப்படுவதில்லை என்றும் கூறினார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கிளிநொச்சியில் எலிக்காய்ச்சலால் இருவர் உயிரிழப்பு

east tamil

பண்டாரகமவில் பழ வியாபாரியிடம் 150,000 ரூபா கொள்ளை

east tamil

மாணவியுடன் ஆபாச காணொளிகள் பகிர்ந்த பாடசாலை ஆசிரியை கைது

east tamil

கைதிகளை விடுவிக்கக் கோரி கையெழுத்து போராட்டம்

Pagetamil

பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழுவின் கருத்தறியும் கூட்டம்

Pagetamil

Leave a Comment