பிரித்தானிய இளவரசர்களான ஹரியும் வில்லியமும் இணைவார்களா என அவர்களது நலம் விரும்பிகள் எதிர்பார்த்துக்கொண்டே இருக்கும்போதுதான் அந்த செய்தி வெளியானது.
அது, இன்று டயானாவின் 60ஆவது பிறந்த நாள் என்பதால், தங்கள் தாயின் சிலை ஒன்றை திறந்துவைப்பதற்காக சகோதரர்கள் இருவரும் சந்திக்க இருக்கிறார்கள் என்ற மகிழ்ச்சியான செய்திதான்.
ஆனால், அதற்கும் முன்பே வேறொரு விடயம் சகோதரர்களை இணைத்திருக்கிறது, ஆம், யூரோ கால்பந்து போட்டியில் ஜேர்மனியை இங்கிலாந்து வென்ற விடயம்தான் சகோதரர்களை இணைத்துள்ளது. அந்த போட்டியில், இங்கிலாந்து ஜேர்மனியை 2-0 என்ற கோல் கணக்கில் காலி பண்ணியது.
இளவரசர் ஹரியும் அவரது மனைவி மேகனும் ராஜ குடும்பத்தை விட்டு வெளியேறி அமெரிக்கா சென்றதைத் தொடர்ந்து 18 மாதங்களாக சரியாக பேசாமல் இருந்த நிலையில், இளவரசர்கள் ஹரியையும் மேகனையும் இப்போது இந்த கால்பந்து வெற்றிதான் இணைத்திருக்கிறது.
சகோதரர்கள் இருவரும் கால்பந்து போட்டி குறித்து ஒன்றுக்கும் மேற்பட்ட முறைகள் தொலைபேசியில் பேசிக்கொண்டார்களாம்.
இதனால் சகோதரர்களுக்கிடையில் இருந்த பகை முழுவதும் நீங்கிவிடும் என்ற முடிவுக்கே செல்லாவிட்டாலும், ராஜ குடும்ப ரசிகர்கள் இதை ஒரு பாஸிட்டிவ் அறிகுறியாக பார்க்கிறார்கள். இன்னொரு விடயம், இளவரசர் வில்லியம்தான் இங்கிலாந்து கால்பந்து கூட்டமைப்பின் தலைவர் என்பது இங்கே குறிப்பிடத்தக்க ஒரு விடயமாகும்.