27 C
Jaffna
January 4, 2025
Pagetamil
ஆன்மிகம்

விதவிதமான விநாயகரும் விரத வழிபாட்டு பலன்களும்..

எந்த ஒரு காரியத்தையும் பிள்ளையார் வழிபாட்டுக்குப் பிறகே செய்யவேண்டும் என்பது ஐதீகமாக கடைப்பிடிக்கப்பட்டு வரும் நம்பிக்கையாகும். அதற்கேற்ப பிள்ளையார் வழிபாடு என்பது எளிமையான நடைமுறைகளை கொண்டுள்ளது.

  • மஞ்சளில் பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டு வந்தால், சகல சவுபாக்கியமும் கிடைக்கும்.
  • குங்குமத்தில் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், செவ்வாய் தோஷம் அகலும்.
  • புற்று மண்ணினால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபாடு செய்தால், விவசாயம் செழிக்கும்.
  • வெல்லத்தால் பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கினால், உடலின் உள்ளேயும், வெளியேயும் உள்ள கட்டிகள் (கொப்பளம்) கரையும்.
  • உப்பு கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால், எதிரிகளின் தொல்லை நீங்கும்.
  • வெள்ளை எருக்கம் இலையில் பிள்ளையார் உருவத்தை வரைந்து வைத்து வணங்கினால், பில்லி மற்றும் சூனியம் போன்ற தீவினைகள் அகலும்.
  • விபூதி கொண்டு பிள்ளையார் பிடித்து வைத்து வணங்கி வந்தால், வெப்பத்தால் ஏற்படும் நோய்கள் தீரும்.
  • சந்தனத்தால் பிள்ளையார் செய்து வைத்து விரதம் இருந்து வழிபட்டால் புத்திர பேறு கிடைக்கும்.
  • சாணத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் சகல தோஷமும் விலகி, வீட்டில் சுப நிகழ்ச்சிகள் நடைபெற வழிவகுக்கும்.
  • வாழைப்பழத்தில் பிள்ளையார் செய்து வழிபட்டால் வம்ச விருத்தி உண்டாகும்.
  • வெண்ணெயில் பிள்ளையார் செய்து வழிபட்டால் கடன் தொல்லை நீங்கும்.
What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

மீனம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

கும்பம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

மகரம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

தனுசு ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

விருச்சிகம் ராசிக்கான 2025 ஆங்கிலப் புத்தாண்டு பலன்கள்

Pagetamil

Leave a Comment