கொரோனாவையும் இளவரசர் பிலிப் மரணத்தையும் முன்கூட்டியே துல்லியமாக கணித்த பிரித்தானிய பெண் ஒருவர், இளவரசர்கள் ஹரியும் வில்லியமும் பகை மறந்து மீண்டும் ஒன்று சேருவார்களா என்பது முதலான சில விடயங்களை தற்போது கணித்துள்ளார்.
எதிர்காலத்தில் நடப்பவற்றை முன் கூட்டியே கணிக்கும் திறன் கொண்ட பிரித்தானிய பெண்ணான Deborah Davies (54), 2021இல் ராஜ குடும்பத்தில் ஒரு மரணம் நிகழும் என்று கணித்திருந்தார். அதுபோலவே இளவரசர் பிலிப் மரணமடைந்தார்.
அத்துடன், 2020இல் ஒரு புதிய நோய் பரவும் என்றும் அவர் கணித்திருந்தார், அதைப்போல் கொரோனாவும் பரவியது. தற்போது அவர் மேலும் சில விடயங்களை கணித்துக் கூறியுள்ளார்.
அவற்றில் ஒன்று இளவரசர்கள் ஹரி, வில்லியம் குறித்தது. இளவரசர் ஹரி, வில்லியம் கேட்டுடனான உறவுகளை சரி செய்துகொள்வார். அவர் பிரித்தானியாவுக்கும் திரும்பி வருவார். ஆனால், மேகன் விலகியே இருப்பார் என்று கணித்துள்ளார் Deborah.
வில்லியம் கேட்டுடனான பிரிவு சரியானாலும், ஹரிக்கும் அவரது தந்தை இளவரசர் சார்லசுக்கும் இடையிலான பிரச்சினைகள் ஒருபோதும் முழுமையாக சரியாகாது என தான் கருதுவதாக தெரிவிக்கிறார் Deborah.மேகனைப் பொருத்தவரை, ஹரி குடும்ப உறவுகளை சீர்ப்படுத்திக்கொண்டாலும், மேகன் மட்டும் ராஜ குடும்பத்தின் அனைத்து உறுப்பினர்களிடமிருந்தும் விலகியே இருப்பார்.
இளவரசர் ஹரி இன்னமும் தேனிலவு காலகட்டத்திலேயே இருக்கிறார். ஆனால், அவர் எதிர்காலத்தில் பிரித்தானியாவுக்குத் திரும்பி பிரித்தானியாவிலேயே வாழ்வதைக் காண்கிறேன் என்று கூறியுள்ளார் Deborah.
குடும்பத்துடனான ஹரியின் உறவுகள் சீர்ப்பட்டாலும், மேகன் அந்த உறவுகளை வலுப்படுத்துவதை உற்சாகப்படுத்தமாட்டார் என்பதை ஹரி உணர்ந்துகொள்ள சிறிது காலம் பிடிக்கும் என்று கூறும் Deborah, அந்த விடயம் அவர்களுக்கிடையில் ஒரு பிரச்சினையாகவே இருக்கப்போகிறது என்கிறார்.