25.8 C
Jaffna
March 5, 2025
Pagetamil
கிழக்கு

கல்முனையில் 24 மணித்தியாலத்தில் 4 கொரோனா மரணங்கள்!

கல்முனைப் பிராந்தியத்தில் கடந்த 24 மணி நேரத்தில் நான்கு மரணங்கள் பதிவாகியுள்ளன, 52 கொவிட் -19 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர். கல்முனைப் பிராந்தியத்தில் கொவிட்-19 மரணங்களின் எண்ணிக்கை 45 ஆக அதிகரித்துள்ளது. இந்நிலைமை எமது பிராந்தியத்தை பொறுத்தவரையில் பாரதூரமானதாகும்.மக்கள் மனது வைத்து செயற்பட்டால் மட்டுமே இத்தொற்றைக் கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர முடியும். சுகாதார நடைமுறைகளை பேணி நடப்பது போல் நடிப்பதால் இத்தொற்றைக் கட்டுப்படுத்தவே முடியாது என கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் தெரிவித்தார்.

கொவிட்-19 தொற்றினால் மரணமடைந்த நால்வரில் மூவர் மருதமுனைப் பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள். இவர்களுள் 39 வயதுடைய ஒருவரும் இந்நோய்த் தொற்றினால் மரணமடைந்துள்ளார். மரணமடைந்த நால்வரில் ஒருவர் சம்மாந்துறை பிரதேசத்தைச் சேர்ந்தவரும் அடங்குகிறார்.கடந்த 24 மணி நேரத்தினுள் கல்முனைப் பிராந்தியத்தில் அதிகப்படியாக அக்கரைப்பற்று பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி காரியாலயப் பிரிவில் 14 தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.

நாவிதன்வெளி பிரதேசத்தில் 10 தொற்றாளர்களும், பொத்துவில் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் ஆறு பேரும் காரைதீவு பிரதேசத்தில் ஐவரும், நிந்தவூர் பகுதியில் நால்வரும் இறக்காமம் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மூவரும் சம்மாந்துறை, அட்டாளைச்சேனை, கல்முனை வடக்கு, கல்முனை தெற்கு ஆகிய சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளில் தலா இருவரும் ஆலையடிவேம்பு மற்றும் சாய்ந்தமருது ஆகிய பிரதேசங்களில் தலா ஒவ்வொருவரும் கொவிட்-19 தொற்றுக்கு இலக்காகியுள்ளனர்.
பாலமுனை பிரதேச வைத்தியசாலையில் 64 கொவிட் -19 நோயாளர்களும், மருதமுனை பிரதேச வைத்தியசாலையில் 105 தொற்றாளர்களும் அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் 36 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதேவேளை, அக்கரைப்பற்று நுரைச்சோலை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 988 பேரும் அட்டாளைச்சேனை தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் 87 பேரும் ஒலுவில் மத்திய நிலையத்தில் 20 பேரும் தனிமைப்படுத்தப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகின்றனர்.

கல்முனைப் பிராந்திய சுகாதார சேவைகள் அதிகாரி பிரிவின் கீழுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் திருக்கோவில் பிரதேசத்தை தவிர ஏனைய அனைத்து பிரதேசங்களிலும் கொவிட்-19 மரணங்கள் நிகழ்ந்துள்ளமையால் இப்பிராந்தியத்தில் உள்ள அனைவரும் சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடிக்க வேண்டும் என பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ஜீ.சுகுணன் மேலும் தெரிவித்தார்.

-பா.டிலான்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

கல்முனை மாநகர சபைக்கு எதிராக மக்கள் போராட்டம்

Pagetamil

சம்மாந்துறையில் எரிபொருளுக்கு வரிசை

Pagetamil

கொம்மாதுறையில் யானைத்தாக்குதலில் ஆசிரியர் வீடு பெரும் சேதம்

Pagetamil

திருக்கோணேஸ்வரர் ஆலய லிங்கேற்பவர் அபிஷேகம் மற்றும் பூஜை

Pagetamil

யானை தாக்கி குடும்பஸ்தர் பலி – மூதூரில் சம்பவம்

Pagetamil

Leave a Comment