15 வயது சிறுமி இணையத்தில் விற்பனை; 20 வாடிக்கையாளர் பற்றிய தகவல் வெளியானது: ஒருவர் துறவி!

Date:

இணையத்தளங்களின் மூலம் 15 வயது சிறுமியை பாலியல் தொழிலாளராக விற்பனை செய்த குற்றச்சாட்டு தொடர்பில் இதுவரை 17 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

சிறுமியின் தாய், மற்றொரு பெண், சிறுமியை பாலியல் தொழிலுக்கு கொண்டு சென்ற ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுநர், ஒரு கார் ஓட்டுநர், சிறுமியின் புகைப்படங்களை இணையத்தில் வெளியிட்ட நபர்கள் மற்றும் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்திய நபர்கள் ஆகியோர்ரே கைதாகியுள்ளனர்.

சிறுமியை பாலியல் துஷ்பிரயோகத்திற்குட்படுத்தியவர்களில் ஒரு துறவியும் உள்ளடங்குகிறார்.

இணையத்தளத்தின் ஊடாக சிறுமி பாலியல் தொழிலில் ஈடுபடுத்தப்படுவது தொடர்பில் மவுண்ட் லவனியா பொலிசாருக்கு கிடைத்த தகவலையடுத்து முதல் சந்தேக நபர் ஜூன் 7 ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்தார்.

சிறுமி மூன்று மாத காலத்தில் ரூ .10,000 முதல் ரூ .30,000 வரை பல்வேறு வலைத்தளங்கள் மற்றும் சமூக ஊடக பக்கங்கள் வழியாக நபர்களுக்கு விற்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இச் சம்பவம் தொடர்பில் சிறுவர் மற்றும் பெண்கள் பொலிஸ் பணியகம் முன்னெடுத்த விசாரணைகளின் அடிப்படையில் இதுவரை மொத்தம் 17 சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டுள்ளனர். தன்னை துஷ்பிரயோகம் செய்த 20 நபர்கள் பற்றிய விபரத்தை சிறுமி வெளியிட்டுள்ளார்.

இவர்களில் 16 பேர் தற்சமயம் விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

தெல்கொட பகுதியைச் சேர்ந்த 15 வயதான சிறுமி ஒருவரே இவ்வாறு விற்பனை செய்யப்பட்டுள்ளார். சிறுமியின் தாயாரை அவிசாவளையிலுள்ள கோடீஸ்வர வர்த்தகரிற்கு 21 இலட்சம் ரூபாவிற்கு விற்ற பின்னர் இந்த கொடூரம் நடந்தது.

1995 ஆம் ஆண்டு எண் 22 தண்டனைச் சட்டத்தின்படி, 16 வயது அல்லது அதற்குக் குறைவான நபர்களை பாலியல் தொழிலாளர்களாக விற்பனை செய்வது குற்றவியல் குற்றமாகும்.

spot_imgspot_img

More like this
Related

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு – பிரேசில் நட்சத்திர வீரர் நெய்மர் அறிவிப்பு

சர்வதேச கால்பந்தில் இருந்து ஓய்வு பெறுவதாக பிரேசில் அணியின் நட்சத்திர வீரர்...

யாழில் சம்பவம்: 7 வயது சிறுமியை பலாத்காரம் செய்த 17 வயது மாமா!

யாழ்ப்பாணம் வட்டுக்கோட்டையில் 7 வயதான தனது மருமகளை பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கிய குற்றச்சாட்டில்,...

தாயார் கைத்தொலைபேசியை பறித்ததால் சிறுமி விபரீத முடிவு!

யாழ்ப்பாணத்தில் 15 வயதான சிறுமியயொருவர் விபரீத முடிவெடுத்து உயிரை மாய்த்துள்ளார். சிறுமி கைத்தொலைபேசி...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்