‘இந்தியன் 2’ படத்தை முடிக்காமல், இயக்குனர் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்கக்கோரி லைகா நிறுவனம் வழக்கு தொடர்ந்துள்ளது.
ஷங்கர் இயக்கத்தில் கமல்ஹாசன் நடித்த இந்தியன் 2 படம், விபத்து, கொரோனா பரவல், கமல்ஹாசனின் அரசியல் பணிகள் போன்ற காரணங்களால் பல மாதங்களாக முடங்கி இருந்தது. இந்தியன் 2 படப்பிடிப்பு தாமதமாவதால், அடுத்த பட பணிகளில் கவனம் செலுத்தி வந்தார்.
இதனால் அதிருப்தியடைந்த, இந்தியன் 2 படத்தின் தயாரிப்பு நிறுவனமான லைகா, தங்கள் படத்தை முடிக்காமல் ஷங்கர் வேறு படத்தை இயக்க தடை விதிக்குமாறு நீதிமன்றத்தை நாடியது. ஆனால் நீதிமன்றமோ, இந்த பிரச்சனையை இருதரப்பும் பேசி தீர்த்துக் கொள்ளுமாறு அறிவுறுத்தியது. இதையடுத்து நடந்த பேச்சுவார்த்தையும் தோல்வியில் முடிந்தது.
இந்நிலையில், லைகா நிறுவனம், இயக்குனர் ஷங்கர் இடையேயான பிரச்சினைக்கு தீர்வு காண, உச்சநீதிமன்ற ஓய்வுபெற்ற நீதிபதி ஆர்.பானுமதியை மத்தியஸ்தராக நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் விரைவில் இந்த பிரச்சினை முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.