ஆதிவாசிகளின் தலைவர் உருவாரிகே வன்னில அத்தன் இன்று கோவிட் -19 தடுப்பூசி செலுத்திக் கொண்டார்.
இன்று காலை கண்டியில் உள்ள தலதா மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த தடுப்பூசி செலுத்தும் நிகழ்வில், ஆதிவாசிகளின் தலைவர், ஆதிவாசி மக்கள் குழுவுடன் இணைந்து தடுப்பூசி பெற்றுக் கொண்டார்.
வரும் ஓகஸ்ட் மாதம் கண்டியில் நடக்கும், வருடாந்திர எசல பெரஹரவின் தொடக்க விழாக்களில் பங்கேற்கவுள்ளதால் அவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டது.
வருடாந்திர பெரஹரவில் பங்கேற்பாளர்களுக்கு முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தடுப்பூசி போடப்பட்டது.
சுகாதார அமைச்சின் தொற்றுநோயியல் பிரிவின் தகவல் படி, 925,242 பேர் அஸ்ட்ராஜெனெகா கோவிஷீல்ட் தடுப்பூசியின் முதல் டோஸைப் பெற்றுள்ளனர், 375, 784 பேர் 2 வது டோஸைப் பெற்றுள்ளனர்.
சினோஃபார்ம் தடுப்பூசியின் முதல் டோஸை 1,657, 741 பேர் பெற்றுள்ளனர், கிட்டத்தட்ட 605, 116 பேர் 2 வது டோஸைப் பெற்றுள்ளனர்.
ஸ்பூட்னிக் வி தடுப்பூசியின் முதல் டோஸை 114, 795 பேர் பெற்றுள்ளதாகவும், 14,425 பேருக்கு 2 வது டோஸ் கிடைத்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.