Pagetamil
உலகம்

அதிகரிக்கும் டெல்டா வகை கொரோனா – வீட்டில் முடங்கிய அவுஸ்ரேலிய மக்கள்!

அவுஸ்ரேலியாவின் நியு சவுத் வேல்ஸ் நகரில் டெல்டா பிளஸ் கொரோனாவால் அதிகம் பேர் பாதிப்பு அடைந்துள்ளனர்.

சீனாவில் கண்டறியப்பட்ட கொரோனா வைரசின் தாக்கம் உலக நாடுகளை அச்சுறுத்தி வருகிறது. கொரோனா வைரஸ் உருமாறி டெல்டா பிளஸ் கொரோனாவாக பரவி கடுமையான தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது.

இந்நிலையில், மின்னல் வேகத்தில் பரவி வரும் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு அவுஸ்ரேலியாவும் தப்பவில்லை.

டெல்டா பிளஸ் கொரோனா வேகமாக பரவி வருவதையடுத்து அவுஸ்ரேலியாவின் 4 நகரங்களில் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளது.

மேற்கு  அவுஸ்ரேலியாவின் தலைநகரான பெர்த் நகரில் செவ்வாய்க்கிழமை இரவு முதல் 4 நாட்களுக்கு ஊரடங்கு அமல்படுத்தப்படுகிறது.

குயின்ஸ்லாந்து தலைநகர் பிரிஸ்பேன் நகரில் செவ்வாய்க்கிழமை மாலை முதல் அடுத்த 3 நாட்களுக்கு ஊரடங்கு அமலில் இருக்கும் என அறிவிக்கப்பட்டு உள்ளது.

ஏற்கனவே, சிட்னியில் ஜூலை 9  வரையிலும், டார்வின் நகரில் வரும் வெள்ளிக்கிழமை வரையிலும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், நியு சவுத் வேல்ஸ் உள்ளிட்ட நகரங்களிலும் ஊரடங்கு அமலில் உள்ளது.

அவுஸ்ரேலியா முழுவதும் 257 பேர் டெல்டா பிளஸ் கொரோனாவுக்கு சிகிச்சை பெற்று வருகின்றனர். நியு சவுத் வேல்சில் அதிகம் பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

மக்கள் மருத்துவம் உள்ளிட்ட அவசர காரணங்கள் இன்றி வீட்டை விட்டு வெளியே வரவேண்டாம் என பல்வேறு நகரங்கள் அறிவித்துள்ளன.

அவுஸ்ரேலியாவில் அஸ்ட்ரா ஜெனகா தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. மொத்த மக்கள் தொகையில்5 சதவீதம் பேருக்கு மட்டுமே தடுப்பூசி போடப்பட்டுள்ளது. தடுப்பூசி போடாததால் டெல்டா வகை கொரோனா அதிகமாக பரவுகிறது எனவும் அந்நாட்டு சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது

இதையும் படியுங்கள்

சீனப் பொருட்கள் மீது 125% வரி விதித்த ட்ரம்ப்!

Pagetamil

ஏட்டிக்குப் போட்டியாக வரி விதிப்பு: தீவிரமடையும் அமெரிக்க- சீன வர்த்தகப் போர்!

Pagetamil

இரவு விடுதி கூரை இடிந்து விழுந்து 79 பேர் பலி

Pagetamil

மிரட்டிக் கொண்டே பேச முடியாது!

Pagetamil

சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து விலகுவதாக ஹங்கேரி அறிவிப்பு!

Pagetamil

Leave a Comment

error: <b>Alert:</b> Content is protected !!