25.8 C
Jaffna
January 5, 2025
Pagetamil
உலகம்

முத்தக் காட்சிக்குப் பின் மாயமான பிரித்தானிய சுகாதார செயலரின் காதலி ;வெளியாகும் இரகசியங்கள்!

பிரித்தானிய சுகாதார செயலரும், திருமணமாகி மூன்று பிள்ளைகளுக்குத் தாயாகிய அவரது உதவியாளரும் திருட்டுத்தனமாக முத்தமிட்டுக்கொள்ளும் காட்சி ஒன்று வெளியாகி, பிரித்தானிய நாடாளுமன்றத்தையே கலகலக்கச் செய்தது.

பிரித்தானிய சுகாதாரச் செயலரான Matt Hancock (42)ம், அவரது உதவியாளரான Gina Coladangelo (43)ம், அலுவலகத்தில் முத்தமிட்டுக்கொள்ளும் காட்சிகள் வெளியானதைத் தொடர்ந்து, Gina திடீரென தலைமறைவாகிவிட்டதாக தகவல் வெளியானது. ஆனால், அவர்கள் இருவரையும் குறித்து பல ரகசிய தகவல்கள் தற்போது தொடர்ந்து வெளியாகி வருகின்றன.

முத்தக் காட்சிக்குப் பின் மாயமான பிரித்தானிய சுகாதார செயலரின் காதலி எங்கே?  வெளியாகும் இரகசியங்கள்... - லங்காசிறி நியூஸ்

இந்த முத்தச் செய்தி வெளியுலகுக்கு தெரியவருவதற்கு பல மணி நேரம் முன்பே Hancock, தங்கள் திருமண வாழ்வு முடிந்துபோனது என தன் மனைவி Marthaவிடம் கூறிவிட்டாராம். இன்னொரு விடயம், இந்த செய்தி வெளியானதைத் தொடர்ந்து, கோடீஸ்வரியான Gina, தான் தன் கணவரான Oliver Tress (54)உடன் வாழ்ந்துவந்த 4.5 மில்லியன் பவுண்டுகள் மதிப்புடைய வீட்டிலிருந்து, தனது பெட்டி படுக்கைகளுடன், தனது 70,000 பவுண்டுகள் மதிப்புடைய ஆடி காரில் எங்கோ புறப்பட்டுச் சென்றதாகவும், அவர் மீண்டும் வீடு திரும்பவில்லை என்றும் தகவல் வெளியானது. இந்நிலையில், Gina தன் கணவரை பிரிந்துவிட்டதாக தற்போது ஒரு தகவல் வெளியாகியுள்ளது.

தனக்கும் சுகாதாரச் செயலருக்கும் உறவு இருப்பதாக செய்தி வெளியானதைத் தொடர்ந்து Gina கணவரைப் பிரிந்துவிட, 12 ஆண்டு கால திருமண வாழ்க்கை இப்படி திடீரென உடைந்துபோனதை தாங்க இயலாமல் அவர் உடைந்து போய் உட்கார்ந்துவிட்டதாக அவருக்கு நெருக்கமானவர்கள் தெரிவித்துள்ளார்கள். சமீபத்திய தகவல் என்னவென்றால், தற்போது Hancockம் Ginaவும் காதலிப்பதாகவும், இருவரும் இணைந்து வாழ முடிவு செய்துவிட்டதாகவும் அவர்களது நண்பர்கள் தெரிவித்துள்ளதுதான்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகின் மிக வயதான பெண் காலமானார்!

Pagetamil

இறந்த குட்டியின் உடலை சுமந்தபடி சுற்றித்திரியும் திமிங்கிலம்!

Pagetamil

16 முறை விண்வெளியில் புத்தாண்டை கொண்டாடும் சுனிதா வில்லியம்ஸ்

east tamil

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி ஜிம்மி காட்டர் காலமானார்!

Pagetamil

தென்கொரிய விமான விபத்தில் 179 பேர் பலி

Pagetamil

Leave a Comment