லண்டனை சேர்ந்தவர் ஜான் மெக்கொரி, இவருக்கும் இவரது மனைவிக்கும் மனது ஒத்து வராததால் இவர்கள் இருவரும் பிரந்து வாழ்ந்து வருகின்றனர். இந்நிலையில் இவர்கள் சேர்ந்து வாழ்ந்த போது மெக்கொரி தன் பெயரிலும், தன் மனைவியின் பெயரிலும் ஒரு வீடு ஒன்றை வாங்கினார். அதன் இன்றைய மதிப்பு 5.50 லட்சம் பவுண்ட்கள், இந்திய மதிப்பில் சுமார் ரூ56 கோடியாகும்.
இந்நிலையில் பிரிந்து சென்ற மனைவிக்கு பணத்தேவை இருந்ததால் அந்த வீட்டிலிருந்து தன் பங்கை தரும்படி கேட்டுள்ளார். ஆனால் மெக்கொரியிடம் அவருக்கு கொடுக்க பணமில்லை. அதனால் அவரை பிரிந்து சென்ற மனைவி இந்த வீட்டை விற்று கிடைக்கும் பணத்தை பிரித்துக்கொள்ள ஐடியா சொல்லிவிட்டு அந்த வீட்டை வாங்கும் நபரை தேட துவங்கிவிட்டார்.
ஆனால் மெக்கொரிக்கு அந்த வீட்டை விற்பனை செய்ய மனதில்லை. அதே நேரத்தில் அந்த முடிவை எடுக்க சட்டப்படி தன்னை பிரிந்து போன மனைவிக்கும் விருப்பம் உள்ளதால் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்தார். இந்நிலையில் அந்த வீட்டை வாங்க ஒரு நபரும் கிடைத்துவிட்ட நிலையில் வீட்டை விற்பனை செய்து பெயர் மாற்றம் செய்ய நாளும் குறிக்கப்பட்டது.
ஆனால் மெக்கொரிக்கு தன் வீட்டை விற்பனை செய்வதிலோ அல்லது தன் மனைவிக்கு அதில் பங்கு கொடுப்பதிலோ துளியும் விருப்பமில்லை. இந்நிலையில் வீடு விற்பனைக்காக குறிக்கப்பட்ட தேதிக்கு 3 நாட்களுக்கு முன்பு அதாவது கடந்த 17ம் தேதி மெக்கொரி தனது வீட்டிற்கே தீ வைத்துவிட்டு தீ விபத்து போல நாடகமாடியுள்ளார். இதனால் முதலில் தீயனைப்பு வீரர்கள் வந்து தீயை அணைத்தனர்.
இதன் பின்பு அந்த வீடு விற்பனை நடக்கவில்லை. எரிந்து போன வீட்டை வாங்க விலை பேசியவர் தயாராக இல்லை. இந்நிலையில் போலீசார் இந்த தீ விபத்து குறித்து விசாரணை நடத்தினர். அப்பொழுது முன்னுக்கு பின் முரணாக பதிலளித்து மெக்கொரி மாட்டிக்கொண்டார். அவரிடம் போலீசார் நடத்திய தீவிர விசாரணையில் தன் மனைவி இந்த வீட்டை விற்க முயல்வதால் அதை தடுக்கவே இவ்வாறு செய்ததாக தெரிவித்தார். அவர் கொளுத்திய வீட்டின் மதிப்பு இந்திய ரூபாயில் சுமார் ரூ 5.6 கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.
தன்னை பிரிந்து சென்ற மனைவி தனது வீட்டை விற்பனை செய்வதை தடுக்க கணவனே வீட்டை கொளுத்திய சம்பவம் சமீபத்தில் நடந்துள்ளது