சீனர்கள் எங்கள் வீட்டு வாசலிலும் வந்து நிற்பார்கள்!

Date:

சீனா நாட்டவரின் நடவடிக்கையைப் பார்த்தால் எங்கள் வீட்டு வாசலிலும் வந்து நிற்பார்கள் போலும் என்று அகில இலங்கை மக்கள் எழுச்சிக் கட்சியின் தலைவர் அருள்.ஜெயந்திரன் தெரிவித்தார்.

யாழ்.ஊடக அமையத்தில் இன்று (29) இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும் போது ஜெயந்திரன் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது-

அரியாலையில் கடல் அட்டை குஞ்சை வளர்த்து பூநகரி கடலில் கடல் அட்டையை வளர்ப்பதற்காக கொண்டுபோய் விடுகிறார்கள்.

வெளிநாட்டவர் எமது கடலில் கடல் அட்டையை வளர்த்து வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்ய அனுமதி என்றால் எமது மக்களுக்கு ஏன் அனுமதி மறுக்கப்படுகிறது?

வடமாகாணத்தில் சீனர்களின் கடல் அட்டை வளர்ப்பு தொடர்பில் கடற்தொழில் அமைச்சர் டக்ளஷ் தேவானந்தா மெளனம் காப்பது ஏன். ஆளுமையுடைய தமிழ் தலைவனாக இருந்தால் இதற்கு உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும். கடல்அட்டை வளர்ப்பில் எங்களுடைய மக்களும் செய்வதற்கு ஆவண செய்ய வேண்டும்.

முன்னைய காலங்களில் எமது மக்கள் கடல்அட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் 16 அரசியல் கைதிகளை விடுதலை செய்த அரசுக்கு நன்றியை தெரிவிப்பதுடன், சிறையில் வாடும் அரசியல் கைதிகளும் விடுதலை செய்யப்பட வேண்டும். அரசியல் கைதிகளின் வாழ்வாதாரத்தை முன்னேற்ற இங்கு உள்ளவர்களும் புலம்பெயர்ந்த தேசத்தில் உள்ளவர்களும் ஒன்று சேர்ந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.

spot_imgspot_img

More like this
Related

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...

5 கிராம் ஐஸ் வைத்திருந்தவருக்கு ஆயுள்!

5 கிராமுக்கும் அதிகமான 'ஐஸ்' போதைப் பொருளைத் தன்வசம் வைத்திருந்து, விற்பனை...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்