அதர்வா நடிக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தின் முக்கிய அப்டேட்!

Date:

ஸ்ரீகணேஷ் இயக்கத்தில் உருவாகி இருக்கும் ‘குருதி ஆட்டம்’ படத்தில் அதர்வாவுக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார்.

‘எட்டு தோட்டாக்கள்’ படத்தை இயக்கி, தமிழ் திரையுலகை திரும்பி பார்க்க வைத்தவர் இயக்குனர், ஸ்ரீகணேஷ். இவர் அடுத்ததாக இயக்கி இருக்கும் புதிய படம், ‘குருதி ஆட்டம்’. அதர்வா முரளி ஹீரோவாக நடித்துள்ள இப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடித்துள்ளார். மேலும் ராதாரவி, ராதிகா சரத்குமார் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்து இருக்கிறார்கள். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார்.

குருதி ஆட்டம் படக்குழு வெளியிட்ட போஸ்டர்

இந்நிலையில், இப்படத்தின் முக்கிய அப்டேட்டை படக்குழு வெளியிட்டுள்ளது. அதன்படி குருதி ஆட்டம் படத்தில் இடம்பெறும் ‘ரங்க ராட்டினம்’ எனும் பாடலை வருகிற ஜூலை 1 வெளியிட உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இப்படத்தை ராக்போர்ட் எண்டர்டெயின்மெண்ட் சார்பில் முருகானந்தம் தயாரித்துள்ளார். இப்படத்தின் படப்பிடிப்பு முடிந்து ரிலீசுக்கு தயாராகி வருகிறது.

spot_imgspot_img

More like this
Related

இந்திய- நேபாள எல்லை காட்டுக்குள் கைதான யாழ்ப்பாணத்தவர்கள்

இந்தியா-நேபாள எல்லையில் உள்ள பஹ்ரைச் மாவட்டத்தில், ரஜ்ஜன்வா சோதனைச் சாவடிக்கு அருகில்,...

ஈரான் மீது விரைவில் மற்றொரு தாக்குதல்: ட்ரம்ப் அறிவிப்பு!

போர் எட்டு மாதங்களை நெருங்கிக்கொண்டிருக்கும் வேளையிலும், எரிபொருள் விலை உயர்வு அமெரிக்க...

மன்மதராசாவுக்கு விளக்கமறியல்

இளம் பெண் ஒருவரைப் பாலியல் ரீதியாகத் துன்புறுத்திய குற்றச்சாட்டின் பேரில் கைது...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்