பிரமாண்ட இயக்குநர் ஷங்கரின் மூத்த மகள் ஐஸ்வர்யாவுக்கும், கிரிக்கெட் வீரர் ரோஹித் தாமோதரனுக்கும் கடந்த 27ம் திகதி மகாபலிபுரத்தில் இருக்கும் ரிசார்ட் ஒன்றில் திருமணம் நடந்தது.
ரிசார்ட்டில் அமைக்கப்பட்டிருந்த பிரமாண்ட செட்டில் தான் திருமணம் நடைபெற்றது. திருமணத்தில் முதல்வர் மு.க. ஸ்டாலின், சுகாதாதரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், சேப்பாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. உதயநிதி ஸ்டாலின் ஆகியோர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.
கொரோனா வைரஸ் பிரச்சனை இன்னும் தீராததால் திருமணத்தில் ஒரு சிலர் மட்டுமே கலந்து கொண்டனர். திருமணத்திற்கு வந்திருந்த அனைவரும் மாஸ்க் அணிந்திருந்தார்கள். பல வேலைகளுக்கு நடுவே தன் மகளின் திருமணத்திற்கு வந்து ஆசி வழங்கிய ஸ்டாலினுக்கு நன்றி தெரிவித்து ட்வீட் செய்தார்
ஷங்கர். ஐஸ்வர்யா, ரோஹித்துக்கு ஸ்டாலின் என்ன பரிசு கொடுத்தார் என்பதை தெரிந்து கொள்ள பலரும் ஆவலாக இருந்தார்கள்.
இந்நிலையில் அந்த பரிசுப் பொருளின் விபரம் தெரிய வந்திருக்கிறது. மரக்கன்றுகள் அடங்கிய பசுமைக் கூடையை பரிசாக அளித்திருக்கிறார் ஸ்டாலின். நாம் மரம் வளர்த்தால், மரம் நம்மை வளர்க்கும் என்று அந்த பசுமைக்கூடையில் எழுதப்பட்டிருந்ததாம்.
திருமணத்திற்கு வந்த ஸ்டாலினை சாப்பிடுமாறு ஷங்கர் கூற அவரோ வேண்டாம், காபி மட்டும் போதும் என்றாராம். இதையடுத்து அவர் காபி குடித்துவிட்டு கிளம்பினாராம்.
கொரோனா வைரஸின் தாக்கம் மேலும் குறைந்த பிறகு சென்னையில் வரவேற்பு நிகழ்ச்சி நடத்தப் போகிறாராம் ஷங்கர். அதில் திரையுலக பிரபலங்கள், அரசியல் பிரமுகர்கள், தொழில் அதிபர்கள் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.