அரசின் சர்வதேச பிணை முறி பத்திரங்களை வாங்க உள்ளூர் நிதி நிறுவனங்களிற்கு அனுமதி!

Date:

சில நிபந்தனைகளிற்கு உட்பட்டு, அரசாங்கத்தின் சர்வதேச பிணை முறி பத்திரங்களை வாங்குவதற்கு நிறுவனங்கள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட உரிமம் பெற்ற வணிக வங்கிகள், தேசிய சேமிப்பு வங்கி மற்றும் நிதி சாரா நிறுவனங்களிற்கு அனுமதி வழங்க அரசு முடிவு செய்துள்ளது.

இது தொடர்பான அமைச்சரவை பத்திரம் வருமாறு-

அனுமதி பெற்ற வர்த்தக வங்கிகள் சிலவும் இலங்கையில் பதிவு செய்யப்பட்ட கம்பனிகள் சிலவும் இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிணைமுறிகளில் முதலிடுவதற்கு இலங்கைக்கு வெளியே கடன் பெற்றுக் கொள்வதற்கு விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது. எமது நாட்டுக்குப் பெற்றுக் கொள்ளக் கூடிய ஒட்டுமொத்த நன்மைகளைக் கருத்தில் கொண்டு, ஒரு சில நிபந்தனைகளுக்கமைய, இலங்கை அரசாங்கத்தின் சர்வதேச பிணைமுறிகளை/ இலங்கை அபிவிருத்தி பிணைமுறிகளைக் கொள்வனவு செய்வதற்காக அனுமதிபெற்ற வர்த்தக வங்கிகளுக்கு, தேசிய சேமிப்பு வங்கி மற்றும் சந்தர்ப்பத்திற்கேற்றவாறு 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதியல்லா நிறுவனங்களுக்கான அனுமதியை வழங்கவும் இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உடன்பாடு தெரிவித்துள்ளது. அதற்கமைய, நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு 2007 ஆம் ஆண்டு 07 ஆம் இலக்க கம்பனிகள் சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நிதியல்லா நிறுவனங்களுக்கு தேவையான வசதிகளை வழங்குவதற்காக 2017 ஆம் ஆண்டு 12 ஆம் இலக்க அந்நிய செலாவணிச் சட்டத்தின் 7(1) உறுப்புரையின் கீழ் கட்டளைகளை வெளியிடுவதற்கும், குறித்த கட்டளைகளை பாராளுமன்ற அங்கீகாரத்திற்காக சமர்ப்பிப்பதற்காகவும் நிதி அமைச்சரராக பிரதமர் அமைச்சர் அவர்கள் சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

spot_imgspot_img

More like this
Related

நீதிக்கான ஓலம் – சர்வதேச விசாரணையை வலியுறுத்தி ஒன்றிணையும் தமிழர் தரப்பு

கடந்த காலங்களில் இடம்பெற்ற படுகொலைகள், காணாமல் ஆக்கப்பட்ட சம்பவங்கள் மற்றும் ஏனைய...

அபிவிருத்தி உத்தியோகத்தர்களை அவமதித்ததாக குற்றச்சாட்டு – போராட்டத்திற்கு அழைப்பு

அபிவிருத்தி உத்தியோகத்தர் சேவையை களங்கப்படுத்தும் அதிகார துஷ்பிரயோகத்தில் ஈடுபடும் அரச அதிகாரிகளுக்கு...

நீதியின் ஓலம் போராட்டத்திற்கு அனுமதியளித்த வலி கிழக்கு தவிசாளரிடம் பொலிஸ் தரப்பு விளக்கம் கோரியது

யாழ். செம்மணிப்பகுதியில் இடம்பெறும் நீதியின் ஓலம் 2 போராட்டம்  இனங்களுக்கிடையே அமைதியற்ற,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்