26.4 C
Jaffna
December 21, 2024
Pagetamil
சினிமா

விஜய் சேதுபதியால் கவலையில் இருக்கும் விக்னேஷ் சிவன்!

இயக்குநர் விக்னேஷ் சிவன் ட்விட்டர், இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கிறார். இன்ஸ்டாகிராமில் அவ்வப்போது ரசிகர்களுடன் சாட் செய்கிறார். அப்பொழுது ரசிகர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளிக்கிறார்.

சிலர் வில்லங்கமாக கேள்வி கேட்டாலும் திறம்பட பதில் சொல்கிறார் விக்னேஷ் சிவன். இந்நிலையில் அவர் இன்ஸ்டா சாட்டில் வந்து ரசிகர்களுக்கு பதில் அளித்தார். அப்பொழுது ரசிகர் ஒருவரோ, நீங்கள் டைரக்டர் ஆகலனா என்ன பண்ணி இருப்பீங்க என்று கேட்டார்.

அதற்கு விக்னேஷ் சிவனோ, டைரக்டர் ஆக ட்ரை பண்ணிட்டு இருந்திருப்பேன் என்றார். விக்னேஷ் சிவன் அளித்த பதிலை பார்த்த ரசிகர்கள் அவரின் தன்னம்பிக்கையை பாராட்டியுள்ளனர்.

நயன்தாராவிடம் பிடித்த விஷயம் தன்னம்பிக்கை என்றீர்கள். ஆனால் உங்களிடம் எங்களுக்கு பிடித்த விஷயமும் தன்னம்பிக்கை தான் அன்பான இயக்குநரே என்று ரசிகர்கள் தெரிவித்துள்ளனர்.

விக்னேஷ் சிவன் தற்போது விஜய் சேதுபதி, நயன்தாரா, சமந்தா ஆகியோரை வைத்து காத்து வாக்குல ரெண்டு காதல் படத்தை இயக்கி வருகிறார். அது குறித்து கேட்டதற்கு, 15 நாட்கள் தான் ஷூட்டிங் பாக்கி இருக்கிறது என்றும், ஜூலையில் அடுத்த பாடல் வெளியிடப்படும் என்றும் தெரிவித்தார் விக்னேஷ் சிவன்.

நானும் ரௌடி தான் படத்தில் இருந்தது போன்று விஜய் சேதுபதி அண்ணா காத்து வாக்குல ரெண்டு காதல் படத்திலும் ஸ்மார்டா, க்யூட்டா, ஃபிட்டா எதிர்பார்க்கலாமா என்று ரசிகர் ஒருவர் கேட்டார். அதற்கு, விக்னேஷ் சிவனோ, விஜய் சேதுபதி மாஸ்டர் ஷெஃப் ஷூட்டுக்கு சென்றிருக்கிறார். அங்கு நன்றாக சாப்பிடுவார் என்று எனக்கு கவலை. ஆனால் கண்டிப்பாக க்யூட்டாக இருப்பார் என்று உறுதி அளிக்கிறேன் என்றார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

அனுஷ்காவின் புதிய பட ரிலீஸ் திகதி அறிவிப்பு

Pagetamil

பிரபாஸ் படத்தில் ஒரு பாடலுக்கு ஆடுகிறாரா நயன்தாரா?

Pagetamil

‘சிவகார்த்திகேயன் 25’இல் ஜெயம் ரவி, அதர்வா, ஸ்ரீலீலா

Pagetamil

“கடந்த ஆண்டே எனக்கு திருமணம் ஆகிவிட்டது” – நடிகை டாப்ஸி

Pagetamil

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

Leave a Comment