மாந்தை கிழக்கு பிரதேச செயலகத்தில் காணி செயற்பாட்டு குழு கூட்டம் இன்றைய தினம் பிரதேச செயலர் ரஞ்சனா தலைமையில் நடைபெற்றது.
இதில் மாந்தை கிழக்கு பிரதேச செயலக நியாயாதிக்கத்திற்குட்பட்ட பகுதிகளில் குத்தகைக்கு வழங்கப்பட்ட அரசகாணிகள்/உரிமைகோரப்படாத காணிகள் தொடர்பாகவும் காரசாரமான விவாதங்கள் இடம்பெற்றிருந்தது.
இதில் செயற்பாடுகள் இடம்பெற்றுக்கொண்டிருக்கும் காணிகளை குத்தகைக்கு வாங்கியவர்களுக்கே குத்தகை அடிப்படையில் வழங்குவதாகவும் ஏனையவர்களுக்கு இடைநிறுத்தி வைப்பதாகவும், அதே வேளை உள்ளூர் விவசாயிகளுக்கு காணிகளை வழங்கும் செயற்றிட்டத்திற்கு உத்தேசிப்பதாகவும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
What’s your Reaction?
+1
+1
+1
+1
+1
+1
+1