அறிமுக இயக்குநர் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் பூஜையுடன் நேற்று துவங்கிள்ளது.
தமிழில் ‘ஹாஸ்டல்’, மலையாளத்தில் ‘மரைக்காயர்’ ஆகிய படங்களை முடித்துள்ளார் அசோக் செல்வன். இந்த இரண்டு படங்களும் ரிலீசுக்காக காத்திருக்கின்றனர். இந்நிலையில் தனது அடுத்த திரைப்படமாக புதுமுக இயக்குநர் ஆர்.கார்த்திக் இயக்கும் புதிய படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார் அசோக் செல்வன்.
ஹீரோவாக மட்டும் நடித்த வந்த அசோக் செல்வன் முதல் முறையாக தயாரிப்பாளராகவும் மாறி ஓ மை கடவுளே என்ற படத்தை தயாரித்து ஹீரோவாகவும் நடித்து இருந்தார். ரசிகர்களிடம் வரவேற்பை பெற்ற இந்த படத்தை தொடர்ந்து தெலுங்கில் தீனி என்ற படத்தின் மூலம் ஹீரோவாக அறிமுகமானார். இப்பொழுது பிரபல மலையாள திரைப்படத்தின் ரீமேக்கான ஹாஸ்டல் திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அசோக் செல்வன் ஜோடியாக பிரியா பவானி சங்கர் நடிக்கிறார்.
இந்நிலையில் ஆர்.கார்த்திக் இயக்கத்தில் அசோக் செல்வன் நடிக்கவுள்ள புதிய படத்தின் பணிகள் நேற்றைய தினம் பூஜையுடன் துவங்கியுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வனுக்கு ஜோடியாக நடிக்க ரீத்து வர்மா, அபர்ணா பாலமுரளி, ஷிவாத்மிகா ஆகிய மூவரும் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளனர். இந்தப் படத்தை வயகாம் 18 ஸ்டூடியோஸும், பெண்டெலா சாகரின் ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட்டும் இணைந்து தயாரிக்கின்றன.
ஆர்.கார்த்திக் இயக்கத்தில் சில ஆண்டுகளுக்கு முன்பு துல்கர் சல்மான் நடிப்பில் ‘வான்’ என்ற படத்துக்குப் பூஜை போடப்பட்டது. ஆனால், அதற்குப் பிறகு அந்தப் படத்தின் எந்தவொரு பணியும் நடைபெறவில்லை. தற்போது அந்தக் கதையைத்தான் அசோக் செல்வனை வைத்து கார்த்திக் இயக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவாளராக ஜார்ஜ் சி.வில்லியம்ஸ், இசையமைப்பாளராக கோபி சுந்தர், கலை இயக்குநராக கமலநாதன், எடிட்டராக ஆண்டனி ஆகியோர் பணிபுரியவுள்ளனர்.