24.7 C
Jaffna
December 16, 2024
Pagetamil
இந்தியா

சிறையில் சொகுசு வசதி? கைதான முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம்!

சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் மணிகண்டன் புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

அதிமுக முன்னாள் அமைச்சர் மணிகண்டன் திருமணம் செய்வதாக கூறி ஏமாற்றியதாகவும், ஐந்து ஆண்டுகளாக தன்னுடன் ஒன்றாக வாழ்ந்து விட்டு ஏமாற்றி கருக்கலைப்பு கட்டாயமாக செய்ய வைத்ததாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாக துணை நடிகை சாந்தினி புகார் தெரிவித்திருந்தார்.

இதையடுத்து மணிகண்டன் மீது விசாரணை நடத்திய போலீசார் கைது செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்ட போது அவர் தலைமறைவானார். இதையடுத்து மணிகண்டனை பெங்களூருவில் கைது செய்த போலீசார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இதனையடுத்து,மணிகண்டன் ஜாமீன் கேட்டு சென்னை முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார். ஆனால், மணிகண்டனின் ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டது. இந்நிலையில் சைதாப்பேட்டை கிளை சிறையில் அடைக்கப்பட்டிருந்த மணிகண்டனை, தற்போது புழல் சிறைக்கு மாற்றம் செய்துள்ளனர்.

சைதாப்பேட்டை சிறையில் மணிகண்டனுக்கு சொகுசு வசதி ஏற்படுத்தி கொடுத்ததாக புகார் எழுந்ததால், புழல் சிறைக்கு மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

உலகப் புகழ்பெற்ற தபேலா மேதை ஜாகிர் உசேன் மறைவு

Pagetamil

விடிய விடிய சிறையிலிருந்த அல்லு அர்ஜுன்: அதிகாலையில் விடுவிப்பு

Pagetamil

தமிழக காங்கிரஸ் முக்கியத் தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் காலமானார்

Pagetamil

நடைபயிற்சிக்கு தனியாக சென்ற மனைவிக்கு முத்தலாக்

Pagetamil

‘பொன்வேலின் முதல் ஓட்டு விஜய்க்கே!’ – மொத்தமாக தவெக-வில் கலந்த மாரி செல்வராஜின் ‘வாழை’ கிராமம்

Pagetamil

Leave a Comment