நவீன மருந்து மாத்திரைகள், மருத்துவ முறைகள் என பல விஷயங்கள் வந்தாலும் வீட்டு வைத்தியத்துக்கு இருக்கும் மவுசு என்றுமே குறைவதில்லை.
ஒவ்வொரு இரவும் தூக்கமின்மையால் பாதிக்கப்படுபவர்கள் சிறிது சூடான நீரைக் குடித்துவிட்டு படுக்கைக்குச் சென்றால் நல்ல ஆழ்ந்த தூக்கம் கிடைக்கும். சர்க்கரை நோய் இல்லையென்றால் சிறிது கருப்பட்டி அல்லது வெல்லம் அல்லது சர்க்கரை சாப்பிட்ட பிறகு படுக்கைக்குச் சென்றாலும் நல்ல பலன் கிடைக்கும்.
வாரத்திற்கு ஒரு முறை அருகம்புல்லை சாறு குடித்து வந்தால் இரத்தம் சுத்தம் ஆவதோடு உடல் வெப்பம் வெப்பம் தணிந்து வலிமை பெறும்.
ஒருவர் போதை பழக்கத்திற்கோ அல்லது புகைப்பிடிக்கும் பழக்கத்திற்கோ அடிமையாக இருந்தால், நீங்கள் எந்த மருந்து எடுத்துக்கொண்டாலும் அதன் விளைவு முழுமையாக உடலுக்கு கிடைக்காது.
சருமம் வெளிர் நிறமாதல் மற்றும் தேமல் போன்ற சருமம் சார்ந்த பிரச்சினைகள் குணமடைய, வெற்றிலையுடன் வெள்ளை பூண்டு சிறிது சேர்த்து விழுதாக அரைத்து தோலில் தினமும் தேய்த்து வர சரும பிரச்சினைகள் எல்லாம் குணமாகும்.
இரத்த அழுத்த பிரச்சினை உள்ளவர்கள் வாரத்திற்கு மூன்று அல்லது நான்கு முறை அகத்தி கீரை, முருங்கை கீரை போன்ற கீரைகளை உணவில் சேர்த்துக்கொண்டால் நல்ல பலன் கிடைக்கும்.