Pagetamil
மலையகம்

பெண்ணை வெட்டிக் கொன்றுவிட்டு சமையலறைக்குள் துணியால் சுற்றிவைத்த இளைஞன்: பூண்டுலோயாவில் கொடூரம் (PHOTOS)

பூண்டுலோயா பழைய சீன் தோட்டத்தில் லயன் குடியிருப்பு ஒன்றில் இருந்து கூரிய ஆயூதமொன்றினால் தாக்கி கொலை செய்யப்பட்ட பெண்னொருவரின் சடலம் மீட்க்கப்பட்டுள்ளது

இன்று (29) காலை குறித்த சடலத்தை மீட்டதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

இவ்வாறு உயிரிழந்தவர் பழைய சீன் தோட்டத்தில் வசித்த 47 வயதான இரு பிள்ளைகளின் பெருமாள் மாலா எனும் தாய் ஒருவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

தனிப்பட்ட தகராறே கொலைக்கான காரணமாக இருக்கலாம் என பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த கொலையுடன் தொடர்புடைய சந்தேகத்தில் அதே தோட்டத்தில் வசிக்கும் 27 வயதான இளைஞர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக பூண்டுலோயா பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

குறித்த பெண்ணின் சடலம் வீட்டின் சமயலறையில் இருந்து மீட்கப்பட்டதாக தெரிவிக்கும் பொலிஸார், சடலம் மீட்கப்படும் போது துணிகளால் சுற்றப்பட்டிருந்தாகவும் தெரிவித்தனர்.

சடலம் நாவலப்பிட்டி நீதவானின் மரண விசாரணைகளின் பின் பிரேத பரிசோதனைகளுக்காக நாவலப்பிட்டி வைத்தியசாலைக்கு கொண்டுச் செல்லப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பில் பூண்டுலோயா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

க.கிஷாந்தன்-

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0

இதையும் படியுங்கள்

27ஆம் திகதி ஊவா, சப்ரகமுவ மாகாண தமிழ் பாடசாலைகளுக்க விடுமுறை

Pagetamil

மத்திய மலைநாட்டில் காட்டுத் தீ அபாயம்

Pagetamil

கண்டி நகர அபிவிருத்திக்கு 168 புதிய திட்டங்கள்

Pagetamil

பதுளையில் பாறை சரிவு ஏற்படும் அபாயம்

Pagetamil

ரயிலில் மோதி ஒருவர் பலி

Pagetamil

Leave a Comment