டெல்டா வகை கொரோனா பரவல்: இங்கிலாந்து விமானங்களுக்கு ஹாங்காங் தடை..

Date:

டெல்டா வகை கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

இங்கிலாந்தில் டெல்டா வகை கொரோனா வைரஸ் வேகமாக பரவி வருகிறது. இதனால், கடந்த சில நாட்களாகவே அந்நாட்டில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கடந்த 24 மணி நேரத்தில் 22 ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டது. இந்நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகள் விமானங்களுக்கு ஹாங்காங் தடை விதித்துள்ளது.

வரும் ஜுலை 1ம் திகதி முதல் இந்த தடை அமலுக்கு வரும் என்று ஹாங்காங் அரசு தெரிவித்துள்ளது. டெல்டா வகையில் இருந்து உருமாற்றம் அடைந்த L452R வைரஸ் பாதிப்பு, இங்கிலாந்தில் இருந்து வந்த பயணிகள் மூலமாக ஹாங்காங்கிலும் பரவியுள்ளதாகவும் அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

ஏற்கனவே இந்தியா, பிலிப்பைன்ஸ், இந்தோனேசியா, நேபாளம், பாகிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து பயணிகள் விமானம் வர ஹாங்காங் தடை விதித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

spot_imgspot_img

More like this
Related

இலங்கையின் முதல் ரோபோ அறுவை சிகிச்சை

இலங்கை தனது முதல் செயற்கை நுண்ணறிவு உதவியுடனான ரோபோ அறுவை சிகிச்சைகளை...

அதிகாரமற்று கூடும் தலைவர்கள்; உலமா கட்சித் தலைவர் மௌலவி முபாறக் அப்துல் மஜீத் சாடல்

நீண்டகாலமாகப் பல்வேறு ஆட்சிகளில் அங்கம் வகித்து, அதிகாரத்தில் இருந்த அரசியல் தலைவர்கள்,...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்