கௌதாரிமுனை பண்ணையிலிருந்து சீனர் மாயம்: மாதாந்தம் 1 இலட்சம் ரூபா பெற்றுக் கொண்டு அனுமதியா?

Date:

கிளிநொச்சி பூநகரியில் அமைந்துள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர்.

இன்றைய தினம் குறித்த கடலட்டை பண்ணையில் சீனனர்கள் எவரும் இருந்திருக்கவில்லை. ஆனாலும் அங்கு அவர்கள் தங்கியிருந்தமைக்கான அடையாளங்கள் தொடர்ந்தும் காணப்படுவதுடன், குறித்த நிறுவனத்தில் பணி புரியும் தமிழ் பேசும் நபர்கள் அங்கு தங்கி இருந்தமையை அவதானிக்க முடிந்தது. நேற்று அல்லது நேற்று முன்தினம் வரை சீனர் அங்கு தங்கியிருந்ததாக பிரதேசவாசிகள் தெரிவிக்கின்றனர்.

அங்கு சீன மொழியில் எழுதப்பட்டிருந்த உணவு பொதிகளையும் அவதானிக்க முடிந்ததுடன், மின்சார கட்டமைப்பு உள்ளிடட சகல வசதிகளுடன் அமைக்கப்பட்ட தங்குமிடத்தினையும் காண முடிந்தது.

குறித்த பகுதியானது ஆரம்பத்தில் பூவரசன் தீவு என ஊடகங்களில் செய்தி வெளியாகியிருந்த புாதிலும் அப்பகுதி கல்முனை என அழைக்கப்படும் பிரதேசத்தின் கடல் எல்லையில் காணப்படுவதாக மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

அப்பகுதியில் அமைக்கப்பட்டுள்ள கடல் பண்ணையானது அமைந்துள்ள இடம் கடா பிடாரி அம்மன் கோவிலுக்கு செல்லும் பாதை எனவும், குறித்த கோவிலுக்கு சென்று வர முடியாத நிலை காணப்படுவதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இவ்வாறான நிலையில் குறித்த பகுதி கால காலமாக தாம் பயன்படுத்தி வந்த போக்குவரத்துக்குரிய பகுதி எனவு்ம, அப்பகுதியிலேயே அவர்கள் இவ்வாறு கடலட்டை பண்ணையை அமைத்துள்ளதாகவும் மீனவர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.

இதேவேளை, சீன நிறுவனத்தின் ஊழியர்களிடம் குறித்த பண்ணை அமைந்துள்ள விதம் தொடர்பில் ஊடகவியலாளர்களும், வருகை தந்திருந்தவர்களும் வினவினர்,

குறித்த பகுதியில் கடலட்டை அமைப்பதற்கு அப்பகுதி மீனவ சங்கமே அனுமதி அளித்ததாகவும், மாதாந்தம் 1 லட்சம் ரூபா வருமானம் குறித்த சங்கத்திற்கு வழங்க பேச்சுக்கள் இடம்பெற்றிருந்ததாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

இதுவரை குறித்த கடலட்டை பண்ணை பதிவு செய்யப்படவில்லை எனவும், கடல் தொழில் சங்கத்தின் அனுமதியுடனேயே இங்கு பண்ணை அமைக்கப்பட்டதாகவும் அவர்கள் தெரிவிக்கின்றனர்.

கடந்த 4ம் மாதமளவில் குறித்த பண்ணையை அமைத்ததாகவும் அவர் குறிப்பிடடிருந்தார். தாம் சீன நிறுவனத்தில் பணி புரிவதாகவும், சீனர்கள் தற்புாது இங்கு இல்லை எனவும் குறிப்பி்ட்டுள்ள அவர் தாம் தற்போது பண்ணையில் கடமையில் இருப்பதாகவும் அவர் தெரிவிவ்தார்.

ஆனாலும் இதுவரை பண்ணையை அகற்றுவதற்கான அறிவுறுத்தல்கள் எதுவும் தமக்கு கிடைக்கவில்லை எனவும் அவர்களால் சுட்டிக்காட்டப்பட்டது.

இதேவேளை குறித்த சீன நிறுவனத்தின் கடலட்டை வளர்ப்பு இடம்பெறும் பகுதியை இன்று நாடாளுமன்ற உறுப்பினர் எஸ் கஜேந்திரன் உள்ளிட்ட குழுவினர் நேரில் பார்வையிட்டனர். குறித்த பகுதியில் சீன நாட்டவர்கள் தங்கி நின்று கடலட்டை வளர்ப்பில் ஈடுபட்டு வருகின்றமை தொடர்பில் செய்திகள் வெளியாகியுள்ள நிலையில். மக்கள் பிரதிநிதிகள் கள விஜயம் மேற்கொண்டு வருகின்றனர்.

spot_imgspot_img

More like this
Related

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளன: ட்ரம்ப்

இஸ்ரேலும் ஹிஸ்புல்லாவும் சண்டையை நிறுத்த ஒப்புக்கொண்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்...

தானசாலை வரிசையில் நின்றவர்களை மோதிக்கொன்ற வாகன சாரதி மீது கொலைக்குற்றச்சாட்டு!

மீகொடவில் உள்ள வெசக் தானசாலையில் வரிசையில் நின்றிருந்த மக்கள் கூட்டத்தின் மீது...

‘நீதிபதி இடமாற்றத்துடன் எனக்கு தொடர்பேயில்லை’: மறுக்கிறார் ஆளுனர்!

யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதியின் இடமாற்றத்துக்கும், வடக்கு மாகாண ஆளுநருகும் எந்தவொரு...
spot_imgspot_img
spot_imgspot_img

பரபரப்பான செய்திகள்