26.5 C
Jaffna
January 9, 2025
Pagetamil
இலங்கை

கௌதாரிமுனை கடலட்டை பண்ணை சீன நிறுவனத்துடன் என்ன தொடர்பு?: பார்க்கப் போனேன் என்கிறார் டக்ளஸ்!

யாழ்ப்பாணம், அரியாலையிலுள்ள சீன நிறுவனத்தின் கடலட்டை பண்ணையை பார்வையிட சென்றிருந்ததாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்துள்ளார்.

அரியாலை கிழக்கில் Guilan sea cucumber hatchery& farm நிறுவனம், கௌதாரிமுனையில் தனது இன்னொரு கடலட்டை பண்ணையை நிறுவியுள்ளது. இது உயர்மட்ட செல்வாக்குடன்- குறிப்பாக கடற்றொழில் அமைச்சு மட்டத்தில் காதும் காதும் வைத்ததை போன்ற இரகசிய நகர்வின் மூலம் அமைக்கப்பட்டதாக ஒரு தரப்பும், நிர்வாக ரீதியான எந்த அனுமதியும் பெறப்படவில்லையென இன்னொரு தரப்பும் குற்றம்சாட்டி வருகின்றன.

அரியாலை கிழக்கில் Guilan sea cucumber hatchery& farm நிறுவனம், 4 ஆண்டுகளின் முன்னர் இயங்க ஆரம்பித்தது. உள்ளூர்வாசி ஒருவரின் காணி பதிவை மேற்கொண்டு, சீன நிறுவனத்தின் பெயரிலேயே பண்ணை இயங்குகிறது.

எது எப்படியோ, இந்த கடலட்டை பண்ணையின் பின்னணியில் அரசியலிருப்பதாக பரவலான ஊகம் உள்ளது. அதை வலுப்படுத்தும் விதமாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா கப்சிப்பாக இருக்கிறார். ஊடகங்களின் தொடரபெல்லைக்கு வெளியில் இருப்பதாக ஊடக வட்டாரங்களில் பரவலான பேச்சுண்டு. கடலட்டை பண்ணை விவகாரமாக பேச, அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொள்ள தமிழ்பக்கமும் பலமுறை முயன்றது. எனினும், அவர் பதிலளிக்கவில்லை.

இந்த நிலையில், அரியாயைிலுள்ள கடலட்டை பண்ணையை பார்வையிட அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா சென்றிருந்தார். இது தொடர்பில் சுயாதீன ஊடகவியலாளர் ஒருவர் இன்று அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவை தொடர்பு கொண்டு வினவியபோது,

“அரியாலையில் உள்ள பண்ணைக்கு நான் போயிருந்தேன். அதை விஸ்தரிப்பது பற்றி நீண்டநாள் கோரிக்கை விடுத்திருந்தனர். இதனால் பார்வையிட சென்றேன். அங்கு போய்விட்டு, கௌதாரிமுனைப்கு போகவிருந்தேன்“ என்றார்.

 

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
1
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

இஸ்ரேலுக்கு அனுமதி இல்லை: பிரதமர் ஹரிணி

east tamil

இலங்கை-இந்தியா இணைப்பு பாலம்: நவீனத்துவத்தின் தொடக்கம்

east tamil

சீன வைரஸ் பரவல்: இலங்கை அரசு மிகுந்த விழிப்புடன் உள்ளது – சுகாதார அமைச்சு

east tamil

இரண்டு புதிய மேல் நீதிமன்ற நீதிபதிகள் பதவியேற்பு

east tamil

இந்திய மீனவர்கள் இலங்கை கடற்பரப்பில் கைது

east tamil

Leave a Comment