26 C
Jaffna
December 10, 2024
Pagetamil
இந்தியா உலகம்

எல்லையில் 50 ஆயிரம் இந்திய ராணுவ வீரர்கள் குவிப்பு: சீனாவின் போர் விமானங்கள் நிறுத்தம்..

லடாக் பகுதியில் சீன எல்லையில் இந்தியா மேலும் 50 ஆயிரம் ராணுவ வீரர்களை குவிக்கிறது.

லடாக் பகுதியில் உள்ள கல்வான் பள்ளத்தாக்கில் கடந்த ஆண்டு சீனா ராணுவத்தினருக்கும் இந்திய வீரர்களுக்கும் இடையே நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் 20 பேர் உயிரிழந்தனர். இதனால் இந்தியா-சீனா எல்லை பகுதியில் பதற்றமான சூழல் நிலவி வந்தது.

இதையடுத்து இருதரப்பிலும் படைகள் குவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து இருநாட்டு ராணுவ அதிகாரிகள் சார்பில் நடத்தப்பட்ட பல்வேறு சுற்று பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, எல்லையில் படைகள் ஓரளவு திரும்ப பெறப்பட்டன. எனினும், சீன ராணுவத்தினரின் அத்துமீறலால் அவ்வப்போது பதற்றம் நிலவுவதால் படைகள் முழுமையாக விலக்கிக் கொள்ளப்படவில்லை.

சீன எல்லையில் இப்போது 2 லட்சம் இந்திய வீரர்கள் நிறுத்தப்பட்டுள்ளனர். இந்நிலையில், கூடுதலாக மேலும் 50 ஆயிரம் வீரர்களை சீன எல்லையில் நிறுத்த இந்தியா முடிவு செய்துள்ளது. இந்திய எல்லைப் பகுதிக்குள் சீன ராணுவத்தினர் நடமாட்டத்தை கட்டுப்படுத்தும் நோக்கத்தில் கூடுதல் படைகள் குவிக்கப்பட்டுள்ளதாக ராணுவ அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும், சீன எல்லைப் பகுதியில் 3 முக்கிய இடங்களில் போர் விமானங்களும் நிறுத்தப்பட்டுள்ளன. அதே சமயம் சீன ராணுவம் கூடுதலான படையினரை திபெத்தில் இருந்து ஜிங்ஜியாங் ராணுவ தளத்துக்கு அனுப்பியுள்ளது. மேலும், போர் விமானங்கள், நீண்ட தூரம் தாக்கும் பீரங்கிகள் போன்றவற்றையும் எல்லைப் பகுதியில் சீனா நிறுத்தியிருப்பதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

சிரியா ஜனாதிபதி மொஸ்க்கோவில் தஞ்சம்

east pagetamil

14 வயது சிறுவனால் வரையப்பட்ட ஓவியம் – கவிழ்க்கப்பட்டது சிரியா ஆட்சி

east pagetamil

சிரியா முன்னாள் ஜனாதிபதி அசாத் பற்றிய மர்மம் விலகியது: ரஷ்யா புகலிடம் அளித்துள்ளது!

Pagetamil

சிரிய ஜனாதிபதியின் கதி என்ன?

Pagetamil

சிரியா தலைநகரும் கிளர்ச்சியாளர்களிடம் வீழ்ந்தது: அசாத் குடும்பத்தின் 50 ஆண்டுகால ஆட்சி முடிந்தது!

Pagetamil

Leave a Comment