29.3 C
Jaffna
April 29, 2025
Pagetamil
இந்தியா விளையாட்டு

உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டியில் தங்கம் வென்று அசத்திய இந்திய வீராங்கனை!

உலக துப்பாக்கி சுடுதல் போட்டியில் இந்திய வீராங்கனை ரஹி சர்னோபத் தங்கப்பதக்கம் வென்று அசத்தியுள்ளார்.

குரோஷியாவில் உலகக் கோப்பை துப்பாக்கி சுடுதல் போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இன்று பெண்களுக்கான 25 மீட்டர் பிஸ்டல் பிரிவுக்கான போட்டி நடைபெற்றது. இப்பிரிவில் இந்தியா சார்பில் இளம் வீராங்கனை ரஹி சர்னோபத் பங்கேற்றார். துள்ளியமாக இலக்கை குறிவைத்து பாய்ண்ட் செய்து வெற்றிபெற்ற அவர் தங்கப்பதக்கம் வென்று சாதனை படைத்தார். இந்த உலகக் கோப்பை போட்டியில் இந்தியாவின் முதல் தங்கப்பதக்கம் இதுவாகும்.இறுதிச்சுற்றில் சர்னோபத் 39 புள்ளிகள் பெற்றார்.

பிரான்ஸ் வீராங்கனை மதில்தே லமோலே, 31 புள்ளிகளுடன் வெள்ளிப்பதக்கத்தை கைப்பற்றினார். மிகவும் எதிர்பார்க்கப்பட்ட மற்றொரு இந்திய வீராங்கனை மனு பாகெர், 7வது இடத்திற்கு பின்தங்கி ஏமாற்றம் அளித்தார். இத்தொடரின் முந்தைய போட்டிகளில் ஒரு வெள்ளி மற்றும் இரண்டு வெண்கலப் பதக்கங்களை இந்தியா வென்றுள்ளது.

 

இதையும் படியுங்கள்

மாட்ரிட் ஓபன் முதல் சுற்றில் ஜோகோவிச் தோல்வி

Pagetamil

இந்தியாவை உலுக்கிய தாக்குதலில் ஈடுபட்டவர்களின் புகைப்படங்கள் வெளியாகின!

Pagetamil

‘போய் மோடியிடம் சொல்லு…’: ஜம்மு காஷ்மீரில் 28 சுற்றுலா பயணிகளை சுட்டுக்கொன்ற ஆயுததாரிகள்!

Pagetamil

கர்நாடக முன்னாள் டிஜிபி ஓம் பிரகாஷ் கத்தியால் குத்தி கொலை: மனைவி கைது

Pagetamil

மதிமுக: “நான் அவரைக் காயப்படுத்தியிருந்தால் அதற்கு வருந்துகிறேன்” – மல்லை சத்யா சொல்வது என்ன?

Pagetamil

Leave a Comment