26.5 C
Jaffna
January 9, 2025
Pagetamil
சினிமா

பிறந்தநாள் கொண்டாடிய நடிகை கார்த்திகா..

நடிகை கார்த்திகா,தனது அம்மா ராதாவுடன் இணைந்து கேக் வெட்டி‌ பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழ் சினிமாவில் 80-களில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை ராதா. இவருக்கு கார்த்திகா, துளசி என இருமகள்களும், விக்னேஷ் என்ற மகனும் உள்ளனர். இதில் மூத்த மகளான நடிகை கார்த்திகா, ஜோஷ் என்ற தெலுங்கு படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தமிழில் கே.வி.ஆனந்த் இயக்கத்தில் ‘கோ’ படத்தில் ஜீவாவுக்கு ஜோடியாக நடித்தார்.

முதல் படத்திலேயே நடிகை கார்த்திகாவுக்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இதையடுத்து அன்னக்கொடி, புறம்போக்கு, வா டீல் ஆகிய படங்களில் நடித்துள்ளார். தமிழை தவிர தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட 4 மொழி படங்களிலும் நடித்துள்ளார்.போதிய வாய்ப்பு இல்லாததால் தற்போது சினிமாவில் நடிப்பதில்லை.

இந்நிலையில் நடிகை கார்த்திகா,தனது அம்மா ராதாவுடன் இணைந்து பிறந்தநாளை நேற்று கொண்டாடினார். குடும்பத்துடன் கேக் வெட்டி பிறந்தநாள் கொண்டாடிய புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் கார்த்திகா வெளியிட்டுள்ளார். தற்போது இந்த புகைப்படங்கள் இணையத்தளத்தை கலக்கி வருகிறது.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘த கோட்’ படத்தால் மன அழுத்தம்: நடிகை மீனாட்சி சவுத்ரி வருத்தம்

Pagetamil

நடிகை ஹனி ரோஸ் புகார் – கேரள தொழிலதிபர் கைது

Pagetamil

கார் பந்தய பயிற்சியின் போது விபத்தில் சிக்கிய அஜித்

Pagetamil

வாழ்க்கையை சீரழித்து விட்டார்: இயக்குனர் மீது நடிகை புகார்

Pagetamil

“நான் சினிமாவுக்குள் வந்ததே சிலருக்கு பிடிக்கவில்லை” – சிவகார்த்திகேயன்

Pagetamil

Leave a Comment