26.1 C
Jaffna
December 15, 2024
Pagetamil
சினிமா சின்னத்திரை

பிக் பாஸ் பாத்திமா பாபுவுக்கு திடீர் அறுவை சிகிச்சை!

பிக் பாஸ் புகழ் பாத்திமா பாபுவுக்கு சமீபத்தில் அறுவை சிகிச்சை நடைபெற்று இருக்கிறது. அது பற்றி அவரே ஒரு வீடியோ வெளியிட்டு இருக்கறார்.

பிரபல செய்தி வாசிப்பாளரான பாத்திமா பாபு தமிழ் பிக் பாஸ் மூன்றாவது சீசனில் போட்டியாளராக கலந்துகொண்டார். அவர் ஷோவில் இரண்டு வாரங்கள் மட்டுமே இருந்தார். அந்த சீசனில் முதல் ஆளாக எலிமினேட் ஆனது அவர்தான்.

தற்போது பாத்திமா பாபு விஜய் டிவியின் புதிய ஷோவான BB ஜோடிகள் நிகழ்ச்சியில் பங்கேற்று இருக்கிறார். இந்த நடன ஷோவில் அவர் ராஜேஷ் வைத்யா உடன் ஜோடி சேர்ந்து பங்கேற்று வருகிறார்.

இந்நிலையில் தற்போது பாத்திமா பாபு திடீரென அறுவை சிகிச்சை செய்து கொண்டிருப்பதாக கூறி வீடியோ ஒன்றை வெளியிட்டு உள்ளார். அவருக்கு கடந்த வாரம் திடீரென கீழ்முதுகில் அதிக அளவுக்கு வலி ஏற்பட்டு உள்ளது. மருத்துவமனை சென்று சோதித்து பார்த்தபோது அவரது கிட்னியில் பெரிய கல் இருப்பதால் தான் இந்த வலி என தெரிவித்து உள்ளனர்.

அந்த கல்லை அகற்ற அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என கூறி அதற்கான ஏற்பாடுகளை செய்து உள்ளனர்.

Ureteroscopy சிகிச்சை செய்து மருத்துவர்கள் அந்த கல்லை வெளியில் எடுக்கவில்லையாம், அவரது கிட்னி முழுவதும் சீல் பிடித்து இருந்ததால் அதை சுத்தம் செய்துவிட்டு கல்லை உள்ளே தள்ளிவிட்டிருக்கிறார்கள். மேலும் ஒரு ஸ்டென்ட் பொருந்தி பாதையை கொஞ்சம் விரிவாக்கி இருக்கிறார்கள்.

இரண்டு வாரங்களுக்கு பிறகு அடுத்தகட்ட சிகிச்சை நடக்கும் என பாத்திமா பாபு கூறி உள்ளார்.

பாத்திமா பாபு வெளியிட்டு இருக்கும் வீடியோவில் ரசிகர்களுக்கு ஒரு அட்வைஸ் கொடுத்து உள்ளார். அதிகம் தண்ணீர் குடிக்க வேண்டும் என்பது தான் அது. தான் ஷூட்டிங் செல்லும் இடங்களில் கழிவறை வசதி அரை கிலோமீட்டர் தள்ளி தான் இருக்கும். அதனால் அடக்கி வைத்து வைத்து இப்படி கல் உருவாகி இருக்கிறது என கூறி இருக்கிறார்.

அதனால் தினமும் 3 லிட்டர் தண்ணீர் குறைந்தபட்சம் குடியுங்கள் என்றும் அவர் அனைவருக்கும் அட்வைஸ் கொடுத்து உள்ளார்.

What’s your Reaction?
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0
+1
0

இதையும் படியுங்கள்

‘ரஹ்மான் எனக்கு தந்தையைப் போன்றவர்’ – வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்த மோஹினி தே

Pagetamil

‘புஷ்பா 2’ வில் இடம்பெற்றுள்ள ‘கிஸ்ஸிக்’ பாடல் நவ.24 இல் வெளியீடு

Pagetamil

ஏ.ஆர்.ரஹ்மான் – சாய்ரா பிரிவுக்கும் மோஹினி தேவுக்கும் தொடர்பா?: வழக்கறிஞர் விளக்கம்

Pagetamil

தெலுங்கு நடிகருடன் திருமணமா?: விஜய் பட நாயகி விளக்கம்!

Pagetamil

இத்தனை வயதாகியும் அந்த விவகாரத்தில் நம்பிக்கையில்லாத நடிகை!

Pagetamil

Leave a Comment